ரவி - ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது என்ன?.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே
சென்னை: ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இரண்டு பேரும் இப்போது தனித்தனியாக வாழ்கிறார்கள். ஆர்த்தியை பிரிந்து கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார் ரவி. ஆனால் அந்த உறவும் பிரேக்கப்பில் முடிந்துவிட்டது. இதனையடுத்து கொதித்து போய் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் பல விஷயங்களை ஓபனாக பேசினார். மேலும் தனது வாழ்க்கையில் இட்லி நடிகை விளையாண்டுவிட்டார் என்றும் கூறினார். அவர் சொன்ன நடிகை குஷ்பூதான் என்று பலரும் சொன்னார்கள்.
ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி மோகன்; சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்தார். அவரை பிரிந்த கையோடு பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமானார். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எல்லோரும் கணித்தார்கள். ஆனால் ரவியை பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் கெனி. அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ரவி. அப்போது மனதில் இருந்த அத்தனையையும் கொட்டி தீர்த்துவிட்டார்.

உள்ளே வந்த குஷ்பூ: முக்கியமாக ரவி - ஆர்த்தி திருமணம் நடந்ததற்கு காரணமே குஷ்பூதான். கடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, 'எனது வாழ்க்கையில் இட்லி நடிகை ஒருவர் விளையாண்டுவிட்டார்' என குண்டை தூக்கிப்போட்டார் ரவி. இட்லி நடிகை என்றாலே தமிழ்நாட்டில் குஷ்பூவைத்தான் எல்லோரும் சொல்வார்கள். எனவே இந்த விஷயத்தில் குஷ்பூவின் பெயரும் அடிபட தொடங்கியது. அவரோ தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்த்திக்கு ஆதரவாகவும், ரவிக்கு எதிராகவும் ட்வீட்டையும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்.
சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், " ரவியின் முன்னாள் மாமியாருக்கும், குஷ்பூவுக்கும் ஆரம்பத்திலிருந்தே பழக்கம். ரவி நல்ல பையனாக இருக்கிறார் என்று குஷ்பூ ஆர்த்தியிடம் கோர்த்துவிட்டார். கோர்த்துவிட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். நட்பின் அடிப்படையில்தான் அப்படி செய்தார். அப்படியே போயிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் ரவியை விட்டுக்கொடுக்காதே என்று ஆர்த்திக்கு ஐடியா கொடுப்பதே குஷ்பூதான். மறுபக்கம் ரவியை திண்டாட வைக்கிறார் என்று சொல்கிறார்கள். பலரால் இவர் ஏமாற்றப்பட்டிருக்கலாம். பலரை இவர் ஏமாற்றியிருக்கலாம். அதெல்லாம் எல்லோரது வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
கலா மாஸ்டரின் ரோல்: குஷ்பூவையும், பிரபுவையும் கோர்த்துவிட்டாது கலா மாஸ்டர்தான். கலா மாஸ்டர் ஒரு மீடியேட்டர். டான்ஸ் மாஸ்டரை பொதுவாக பல விதமாக சினிமாவில் பயன்படுத்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மீனாவுக்கும் இவர்தான் மீடியேட்டர். மீனா டெல்லி வரை சென்றதற்கே கலா மாஸ்டர்தான் காரணம். கலா மாஸ்டர் வீட்டில் குஷ்பூவுக்கும் பிரபுவுக்கும் திருமணம் என்று அப்போதே ஒரு பெரிய நாளிதழில் வந்தது. பிரபு ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தே குஷ்பூ திருமணம் செய்துகொண்டார் என்று சொன்னார்கள்.
துப்பாக்கியோடு வந்த சிவாஜி?: அந்த திருமணத்தை கேள்விப்பட்டு சிவாஜி துப்பாக்கியோடு வந்ததாகவும், ஜெயலலிதா தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததாகவும் சொல்வார்கள். மேலும் அந்த சமயத்தில் குஷ்பூவும் பிரபுவும் சேர்ந்து ஒரு பிளாட் வாங்கினார்கள். இந்த பிரச்னையால் அதை விட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். முறைமாமன் படத்தின்போதுதான் இதெல்லாம் வெளியே வந்தது. அதற்கு பிறகுதான் குஷ்பூவுக்கும், சுந்தர்.சிக்கும் நட்பு உருவாகி காதலாக மாறியது" என்றார்.


Click it and Unblock the Notifications
