கீர்த்தியின் கவர்ச்சி.. கட்டுன புருஷனே சும்மா இருக்கார்.. உங்களுக்கு என்ன?.. பத்திரிகையாளர் விளாசல்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இந்தச் சூழலில் கீர்த்தி பாண்டியன் குறித்து பத்திரிகையாளர் சுபைர் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

Keerthy Pandian Ashok Selvan Subair

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான கண்ணகி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.

உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.

மேலும் அசோக் செல்வனிடம், திருமணத்துக்கு பிறகு கீர்த்தி பாண்டியன் நடிப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அசோக், நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.கீர்த்தி மற்றும் அசோக்கின் செயல்களையும், பதில்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடினர்.மேலும் சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருவார்கள் என்றும் கூற ஆரம்பித்தனர்.

சுபைர் பேட்டி: இதற்கிடையே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். அதனை சிலர் விமர்சிக்கவும் செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சுபைர் ஒரு பேட்டியில், “ ஒருகாலத்தில் மார்க்கெட் இல்லையென்றால் நடிகைகள் தங்களது கிளாமரான புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்போது நடிகைகள் இன்ஸ்டாவில் ஷேர் செய்து ப்ரோமோஷன் செய்துகொள்கிறார்கள். அப்படித்தான் கீர்த்தி பாண்டியனும். இந்த விவாகரத்தில் கணவரான அசோக் செல்வனே சும்மா இருக்காரு. மற்றவர்கள் ஏன் பேச வேண்டும்”என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X