திரிஷாவுக்கு திருமணமாம்?.. மாப்பிள்ளையும் பார்த்துட்டாங்களாம்.. கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 41 வயதாகும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் திரிஷாவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே.

Journalist Subair Reveal New Information About Trisha Marriage

தனியாவா பேசலாமே: அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. குறிப்பாக சூர்யாவிடம், தனியாவா பேசலாமே என அவர் சொல்வது ரசிகர்களின் மொபைலில் பல வருடங்களுக்கு இருந்தது. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு தொடர்ந்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கனவுக்கன்னி த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். பிறகு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் கடந்த பல வருடங்களாகவே டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது.

அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்றும்; அதில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நயனும் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்திருப்பதால் திரிஷா காட்டில் அடைமழை என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

நோ திருமணம்: திரிஷாவுக்கு இப்போது 41 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டதுதான் என்கிறார்கள் ஒருதரப்பினர். இதற்கிடையே மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவரை திரிஷா திருமணம் செய்யவிருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று திரிஷாவே கூறியிருந்தார்.

புதிய தகவல்: இந்நிலையில் திரிஷாவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடிக்கிறது. அதாவது பத்திரிகையாளர் சுபைர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "திரிஷாவுக்கு விரைவில் திருமணம் என்று செய்தி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை அவரது சொந்தத்திலேயே பார்த்திருக்கிறார்கள். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்" என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் திருமணம் பற்றி இப்படி அடிக்கடி பேச்சு எழுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X