Dawood Ibrahim - தமிழ் நடிகையை துபாய் அதிகாரிகளுக்கு விருந்தாக்கினாரா தாவூத் இப்ராஹிம்..?
மும்பை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் முதல் இடத்தில் தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim). மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் நடிகைகளை துபாய் அதிகாரிகளுக்கு அவர் விருந்தாக்கியதாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1500 பேர்வரை காயமடைந்தனர். இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த துன்பியல் சம்பவத்துக்கு முழு முதல் காரணம் தாவூத் இப்ராஹிம். அதனையடுத்து அவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் பல வருடங்களாக முயல்கிறது இந்தியா. ஆனால் இன்னமும் சிக்கவில்லை.

காவல் துறை அதிகாரியின் மகன்: தாவூத் இப்ராஹிம் நடுத்தர குடும்பத்தில் ஒரு காவல் துறை அதிகாரிக்கு மகனாக பிறந்தவர். வாத்தியார் பிள்ளை மக்கு என்ற சொலவடைபோல் காவல் துறை அதிகாரியின் மகனான தாவூத்துக்கு க்ரைம் மீது பார்வை திரும்பியது. அப்போது மும்பையை ஆட்சி செய்துகொண்டிருந்த வரதராஜ முதலியார் மற்றும் ஹாஜி மஸ்தானை தன்னுடைய ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார் தாவூத்.
தொடர் க்ரைம்: ஆரம்பத்தில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட வந்த தாவூத் ஒருகட்டத்தில் பெரிய க்ரைமை நோக்கி நகர்ந்தார். குறிப்பாக கட்ட பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது, கொலை, ஆள் கடத்தல் என அவரது அசுர கரங்கள் மும்பையை வளைக்க ஆரம்பித்தது. அவரது வளர்ச்சி ஒருகட்டத்தில் வரதராஜ முதலியார் மற்றும் ஹாஜி மஸ்தானையே பிரமிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிழலுலக தாதா: தாவூத் இப்ராஹிம் வளர்ந்து நிழல் உலக தாதாவாக மாறிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் டி கம்பெனி என்று ஒரு கம்பெனியையும் ஆரம்பித்து திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களையும் செய்ய ஆரம்பித்தார். மேலும் பாலிவுட் சினிமாவையும் அவர் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாகவும் அவரது அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே செல்ல அவர் சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அவர் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது.
பம்பாய் மெரி ஜான்: தாவூத் இப்ராஹிமை பற்றி ஏராளமான கதைகள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அவரது வாழ்க்கையை வைத்து சமீபத்தில்கூட அமேசான் ப்ரைமில் பம்பாய் மெரி ஜான் என்ற வெப் சீரிஸின் முதல் சீசன் வெளியானது. அதில் தாவூத்தின் இளமை காலம் முதல் இந்தியாவிலிருந்து தப்பி செல்வதுவரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விரைவில் இரண்டாவது சீசனும் வெளியாகவிருக்கிறது.
இறந்துபோன தாவூத்?: இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டுவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சூழல் இப்படி இருக்க பத்திரிகையாலர் உமாபதி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு தாவூத் இப்ராஹிம் பாலிவுட்டில் செய்த அட்டூழியங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என யாரின் படம் நன்றாக ஓடி லாபம் எடுத்துவிட்டால் அவர்கள் அடுத்த படத்தை தாவூத் சொல்லும் தயாரிப்பாளரிடம்தான் செய்ய வேண்டும்.
துபாய் லிங்க்: யாரேனும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அவர்களை காலி செய்துவிடுவார்கள். அதேபோல் இங்கிருக்கும் நடிகைகளை அழைத்து சென்று துபாய் அதிகாரிகளுக்கும் விருந்தாக்குவார். அதன் மூலம் துபாய் லிங்க் அவருக்கு கிடைத்தது. துபாய் அதிகாரிகளுக்கு எப்போதுமே இந்திய நடிகைகள் மீது ஒரு கிரேஸ் இருந்துகொண்டே இருந்தது. அதனை தாவூத் பயன்படுத்திக்கொண்டார்.
பெயர் சொல்லமாட்டேன்: ஏன் தமிழில் இருந்து பாலிவுட் சென்ற ஒரு நடிகையைக்கூட தாவூத் இப்ராஹிம் துபாய் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதாக சொல்வதுண்டு.. பெயர் சொல்ல விரும்பவில்லை. தாவூத் இப்ராஹிம் அழைத்தால் வந்துதான் ஆக வேண்டும் என்ற நிலைதான் பாலிவுட் நடிகைகளுக்கு இருந்தது" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நடிகையாக இருப்பார் என்று தேடுதல் வேட்டையில் இறங்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











