சிம்ரன் நினைத்திருந்தால் ஜோதிகா அவ்வளவுதான்.. பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்.. பஞ்சாயத்து ஓயாதோ?
சென்னை: நடிகை சிம்ரன் சில நாட்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசியபோது தன்னை ஒரு நடிகை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறியிருந்தார். சிம்ரன் கூறிய அந்த நடிகை ஜோதிகாதான் என்று பலரும் பேசிவருகிறார்கள். எனவே இந்த விஷயம் தமிழ் சினிமா உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் ஜோதிகாவெல்லாம் இல்லை ஒருவேளை அவர் அப்படி சொல்லியிருந்தாலும்கூட சிம்ரன் இதனை பெரிய விஷயமாக மாற்றியிருக்க வேண்டாம் என்றும் ஒருதரப்பினர் சொல்லிவருகிறார்கள். இதன் காரணமாக தவறு சிம்ரன் பக்கமா இல்லை ஜோதிகா பக்கமா என்ற பட்டிமன்றமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தச் சூழலில் யூடியூபில் பேட்டி கொடுத்து பிரபலமாகியிருக்கும் பத்திரிகையாளர் இந்த விவகாரம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
இடையழகி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்ரன். நேருக்கு நேர் படத்தின் மூலம் முதலில் தமிழில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தில் கமிட்டான கையோடு விஐபி, ஒன்ஸ்மோர் என வரிசையாக கமிட்டானார். இந்த மூன்று படங்களில் நேருக்கு நேர் திரைப்படம் தாமதமாகத்தான் ரிலீஸானது. வரிசையாக வெளியான மூன்று படங்களுமே சிம்ரனுக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது. நடனம், நடிப்பு, கவர்ச்சி என அத்தனையும் ஒருங்கே அமைந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார் என்று பலரும் ஓபனாகவே கூறினார்கள். மூன்று படங்களுக்கும் கிடைத்த வரவேற்பை அடுத்து வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சிம்ரனும் தனக்கு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த ஆரம்பித்தார்.

சிம்ரன் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை: அதன்படி அவர் கமல் ஹாசன், பிரபுதேவா, விஜய், அஜித், அர்ஜுன், சரத்குமார் அத்தனை ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் கிளாமர் ரோலை செய்துகொண்டே ஏழுமலை, அரசு, டைம், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே என ஏகப்பட்ட படங்களில் ஹோம்லி ரோலையும் செய்தார். இதன் காரணமாக எந்தக் கேரக்டராக இருந்தாலும் சிம்ரன் செட் ஆவார் என்ற பிம்பமும் உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து கூப்பிடுங்கள் சிம்ரனை என்ற நிலைமையும், அவர் இல்லாமல் ஒரு படம்கூட இல்லை என்ற நிலைமையும் உருவானது. அதனால் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே கோலிவுட்டின் கனவு கன்னியாக மாறிவிட்டார் அவர்.
நடனம்னாலே சிம்ரன்: பொதுவாக பிரபுதேவா, ராஜு சுந்தரம், விஜய் போன்றோர் நடனம் ஆடும்போது அவர்களுடன் ஆடும் ஹீரோயின்கள் ஸ்கோர் செய்வது கொஞ்சம் கடினம்தான். ஏனெனில் அவர்களது ரத்தத்திலேயே நடனம் ஊறி போயிருக்கிறது. ஆனால் இவர்களுடன் நடனம் ஆடிய சிம்ரனோ அவர்களை தாண்டியும் ஸ்கோர் செய்திருக்கிறார். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஆல்தோட்ட பூபதி நானடா என ஏகப்பட்ட பாடல்களில் தனது அபாரமான நடன திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டோலிவுட்டிலும் பெரிய ரவுண்டு வந்தார். இதற்கிடையே அவர் ராஜுசுந்தரத்தை காதலித்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.
இரண்டாவது இன்னிங்ஸ்: தன்னுடைய கரியர் கொஞ்சம் ஆட்டம் கண்ட சமயத்தில் தனது பால்ய கால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவர்; தொடர்ந்து பேட்ட, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்க்ரீனில் வாலி பட இசையோடு சிம்ரன் தோன்றியபோது தியேட்டர்களில் விசில்கள் பறந்தன. அடுத்ததாக சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது மே மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படமும் நல்ல ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது.
சமீபத்திய சர்ச்சை: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அதில் பேசிய அவர், "சமீபத்தில் என்னுடைய சம காலத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு, உங்களை இந்த மாதிரியான ரோலில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மெசேஜ் செய்தேன். அதற்கு அவரோ, ஆன்ட்டி ரோலில் நடிப்பதைவிடவும் இந்த மாதிரியான ரோலில் நடிக்கலாம் என பதிலளித்தார். அது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. டப்பா ரோலில் நடிப்பதைவிட ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

ஜோதிகாதான் அந்த நடிகையா?: சிம்ரனின் இந்தப் பேச்சையடுத்து அவரிடம் அப்படி பேசிய நடிகை லைலாவா இல்லை ஜோதிகாவா என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் அவரிடம் பேசியது ஜோதிகாவாகத்தான் இருக்கும்; ஏனெனில் அவர்தான் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதனை குறிப்பிட்டுதான் டப்பா என்கிற வார்த்தையை சிம்ரன் பயன்படுத்தியிருக்கிறார் என கூறினார்கள். இதனால் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.
பத்திரிகையாளர் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் பப்ளிக் விங் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிம்ரனிடம் அந்த நடிகை அப்படி சொன்னதை சிம்ரனால் தாங்க முடியவில்லை. அதன் காரணமாகத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சிம்ரன் இன்றுவரை ஒரு தேவதையாக இருக்கிறார்.ஆனால் சிம்ரன் குறிப்பிட்ட நடிகை ஒரு பாசிட்டிவ் டோனில்கூட சிம்ரனிடம் அந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம். சமீபமாக ஜோதிகா பற்றிய டாபிக்தான் சமூக வலைதளங்களில் ரொம்பவே வைரலாகி போய்க்கொண்டிருக்கிறது. ஜோதிகாவும் சிம்ரனும் ஒன்றாக பயணப்பட்டவர்கள்தான்.
சிம்ரன் நினைத்திருந்தால்: ஜோதிகாவை பொறுத்தவரை நல்ல நடிகைதான். ஆனால் தமிழ்நாட்டில் இருந்தவரை அவரது பேச்சு ஒரு மாதிரியும், மும்பைக்கு சென்றதும் அவரது பேச்சு வேறு மாதிரியும் இருக்கின்றன. எதை நோக்கி அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஜோதிகா இன்னொரு விஷயத்தை நினைத்து பார்க்க வேண்டும். அதாவது அவர் முதல் படமான வாலி படத்தின்போது சிம்ரன் டாப் நடிகையாக இருந்தவர். சிம்ரன் மட்டும் நினைத்திருந்தால் வாலியில் ஜோதிகாவுக்கு அந்த சீன்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இயக்குநராக அது முதல் படம். அதேபோல் சூர்யாவின் முதல் படத்தில் சிம்ரன் ஜோடி. அதேபோல் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேரக்டரில் முதலில் சிம்ரன்தான் நடிக்க வேண்டியதிருந்தது. இதையெல்லாம் ஜோதிகா நினைத்து பார்க்க வேண்டும். இப்படி ஜோதிகாவின் வளர்ச்சியில் சிம்ரனின் பங்கும் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











