காவல் நிலையம் சென்ற கனகா.. அவருக்கு அச்சுறுத்தலா?.. உண்மையில் நடந்தது என்ன?.. பிரபலம் ஓபன்

சென்னை: நடிகை கனகா கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பீக்கில் இருந்தவர். திடீரென அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அவரது தாய் தேவிகா உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். திருமணமும் செய்துகொள்ளாத அவர் இப்போதுவரை தனது வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சுபைர் பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் ப்ளாக் & ஒயிட் சினிமா காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தேவிகா. அவரது ஒரே மகள் கனகா. ஒரு நிகழ்ச்சியில் கனகாவை பார்த்த கங்கை அமரன் தான் எடுத்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் செய்தார். முதலில் தேவிகாவும், கனகாவும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கங்கையின் ஓயாத வற்புறுத்தலாலும், சமாதானத்தாலும் இரண்டு பேரும் ஒத்துக்கொண்டார்கள்.

ப்ளாக் பஸ்டர் ஹிட்: அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக கனகாவின் நடிப்பும், நடனமும், அழகும் அனைவரையும் கவர்ந்தது. அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொட்ட ஆரம்பித்தன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர்; பல ஹீரோயின்களுக்கு பெரிய போட்டியாகவே திகழ்ந்துகொண்டிருந்தார். கண்டிப்பாக அவரது தாய் தேவிகா போன்றே கனகாவும் நீண்ட காலம் சினிமவில் கோலோச்சி இருப்பார் என்றே பலரும் ஆரூடம் கூறினார்கள்.

Journlist Subair Revealed Unknown Secrets About Actress Kanaka
Photo Credit:

ஒதுங்கிய கனகா: ஆனால் திடீரென கனகாவின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அம்மா மீது உச்சக்கட்ட பாசத்தை வைத்திருந்த கனகாவால் அந்த இழப்பை துளிக்கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. சினிமாவிலிருந்தும் ஒதுங்கிவிட்டார் இதற்கிடையே அவரை ஒருவர் ஒருதலையாக காதலித்ததாகவும்; அதனை சரியாக புரிந்துகொள்ளாமல் அந்த நபரை கனகா அவமானப்படுத்திவிட்டார் என்றும்; அதுவும், தாயின் இழப்பும் சேர்ந்து அவரை உச்சக்கட்ட மன அழுத்தத்தில் தள்ளியதாகவும் ஒரு பேச்சு உண்டு.

நீண்ட வருடங்கள்: பிறகு கனகா தனது வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகை குட்டி பத்மி சில காலத்துக்கு முன்பு கனகாவை சந்தித்தார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு; விரைவில் தனது யூடியூப் சேனலுக்கு கனகா பேட்டி கொடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். கனகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்; அய்யோ கனகா என்ன இப்படி ஆகிட்டாங்க என்று வேதனையை பகிர்ந்தனர்.

நோ பேட்டி: எப்போது கனகாவின் பேட்டி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவரை சந்தித்த சில நாட்கள் கழித்து பேசிய குட்டி பத்மினி, 'கனகா தனக்கு பேட்டி தரவில்லை' என்று தெரிவித்துவிட்டார். சமீபத்தில்கூட கனகாவின் தந்தை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'எனது மகள் நடிக்க வந்தது பிடிக்கவில்லைதான். இப்போது அவர் வந்தால்கூட நான் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்று உறுதியளித்திருந்தார்.

சுபைர் பேட்டி: இது ஒருபக்கம் இருக்க கனகாவுக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரரால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் சுபைர், "பக்கத்து வீட்டுக்காரருக்கும் கனகாவுக்கும் இடையே ஒரு சுற்றுச்சுவர் பிரச்னை ஓடுகிறது. அதற்காக இவர் காவல் துறையில் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த ப்ராப்பர்ட்டியே ஒரு கேஸ்லதான் இருக்கிறது. அதேபோல் மாலில் ஒரு ஆர்ஜே கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அவரிடம் கனகா பேட்டி கொடுத்திருப்பதாகவும் விரைவில் வரும் என்றும் சொல்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X