தெலுங்கு படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் வனிதாவின் மகள்.. அட்டகாசமான போஸ்டர்..குவியும் வாழ்த்து!

சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் மகளான வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த வனிதா, திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து காணாமல் போனார். தற்போது, மீண்டும் சினிமாவில் நடித்து வரும் வனிதா, இயக்குநர் அவதாரம் எடுத்து, 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை இயக்கினார்.

கடந்த ஆண்டு வெளியான அந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ்வீட்டில் தான் சம்பாதித்த படத்தை போட்டு எடுத்திருந்தார். கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் தியேட்டரில் இரண்டு நாட்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் போய்விட்டது. அதொடு மட்டுமில்லாமல் இளையராஜா பாட்டை பயன்படுத்தியதால், அவர் காப்பி ரைட்ஸ் கேட்டு பிரச்சனை செய்தார். இப்படி பணம் போட்டு எடுத்த படம் பிரச்சனையில் சிக்கியதால், படத்தை நேரடியாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

Vanitha Jovika Vijaykumar
Photo Credit:

ஜோவிகாவின் முதல் படம்: வனிதாவின் மகள் ஜோவிகா ஹீரோயினாக ஏற்கனவே கமிட்டாகி இருப்பதாக வனிதா சொல்லி வந்த நிலையில், தற்போது ஜோவிகா நடித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஜோவிகா, எனது முதல் திரைப்படம். அதுவும் தெலுங்கில் MS Raju அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவது. நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றும் ஒரு அனுபவமாகும். குறிப்பாக, 'தேவி', 'வர்ஷம்', 'ஒக்கடு' இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்த்து வளர்ந்தவள் நான். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். என்னை நீங்கள் நம்பி, என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

குவியும் வாழ்த்து: 'தேவி' படத்தின் மூலம் அம்மா உங்களுடன் இணைந்து நடித்த முதல் படத்திலிருந்து, 'அகாதா' (Agadha) மூலம் நான் அறிமுகமாகும் எனது முதல் படம் வரை. என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து, துணிச்சலுடன் இந்த முடிவை எடுத்ததற்கு, என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் ஜோவிகாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X