twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோதிகா போல வர ஆசைப்படும் லட்சுமி மேனன்

    By Mayura Akilan
    |

    பாண்டியநாடு படத்தில் டீச்சராக நடிக்கும் லட்சுமி மேனனுக்கு காக்க காக்க ஜோதிகாதான் ரோல்மாடலாம்.

    தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் ஆகியோர்தான் ரோல் மாடலாக இருக்கிறார்கள்.

    அந்த வரிசையில் தற்போது 'கும்கி' நாயகி லட்சுமிமேனன் தன்னுடைய ரோல்மாடலாக ஜோதிகாவைத்தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    டீச்சர் வேடம்

    டீச்சர் வேடம்

    விஷாலுடன் ‘பாண்டியநாடு' படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் லட்சுமி மேனன். ஆனால் பதினொன்றாம் வகுப்பு மாணவி டீச்சர் வேடம் போடுவது பெருமையாக இருக்கிறதாம்.

    ஜோதிகாதான் ரோல்மாடல்

    ஜோதிகாதான் ரோல்மாடல்

    எனது உடல் அமைப்பு அதற்கு பொருந்தியதால் இந்த வேடத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த சில ஆசிரியர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டாலும் ‘காக்க காக்க' படத்தில் ஜோதிகா நடித்த பாணியில்தான் நடித்தேன் என்கிறார்.

    நல்ல கதைகள்

    நல்ல கதைகள்

    ஜோதிகா போன்று ஒரு நடிகையாக சினிமாவில் வலம் வரவேண்டும் என்ற ஆசையுடன் தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

    சந்திரமுகி பிடிக்கும்

    சந்திரமுகி பிடிக்கும்

    ‘காக்க காக்க', ‘சந்திரமுகி' உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படங்களை பல தடவை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறாராம்.

    ஜோதிகா மாதிரியே

    ஜோதிகா மாதிரியே

    பாண்டியநாடு படத்தில் லட்சுமி மேனன் நடிப்பை பார்த்துவிட்டு ‘காக்க காக்க' ஜோதிகா போல இருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

    முன்பு சூர்யா இப்போ ஜோதிகா

    முன்பு சூர்யா இப்போ ஜோதிகா

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த லட்சுமி மேனன், சூர்யாதான் தன்னுடைய கனவு நாயகன் என்றும் சூர்யா உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்போது ஜோதிகாதான் தன்னுடைய ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.

    English summary
    Pandiya Nadu film heroine lakshmi menon Said that actress Jothika is her role model.She Played a teacher role in this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X