விஜய் அண்ணா.. இத நான் சொல்லி தரணுமா? விஜய் ரசிகர்களை சீண்டிய ஜூலி!

சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய், வேலூரில் சில நாட்களுக்கு முன்பு பேசினார். அந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை சிறுவன் அடக்கியது குறித்து ஒரு
குட்டி ஸ்டோரியை கூறினார். இதை பிக் பாஸ் ஜூலி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து கடுமையாக விமர்சனம் எழுந்து இருக்கும் நிலையில் ஜூலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு ப பிரபலமடைந்து ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அண்மையில் இவர், விஜய் சொன்ன குட்டி கதையை கண்டித்து, "அண்ணா உங்கள் கட்சியில் இருக்கும் பாதி பேர் மைனர் பசங்க... அவர்கள் நாங்களும் புல்லுக்கட்டை காட்டி ஜல்லிக்கட்டு காளையை அடக்க போகிறோம் என்று நினைக்க போய் ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன செய்வது... 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும், 500 ஆக்கி விடாதீர்கள் என கடுமையாக பேசித்து இருந்தார்.

Vijay TVK Party Julie
Photo Credit:

ஜூலி: அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை கடுமையாக திட்டி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் வீடியோ வெளியிட்டு இருக்கும் ஜூலி, நான் கூட விஜய் அண்ணா சொன்ன அந்த ஜல்லிக்கட்டு ஸ்டோரியை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறது என நினைத்து பயந்தேன். ஆனால், அதனுடைய கருத்து ஒரு சிலருக்கு புரிந்ததை நினைத்து எனக்கு மிகவும் சந்தோஷம்.

விஜய் அண்ணா: ஒரு சிலர் புரியாமல் என்னை திட்டுகிறார்கள் "What is this VIJAY ANNA ? It's very wrong VIJAY ANNA" இதைத்தான் நான் சொன்னேன் உங்கள் கட்சியில் இருக்கும் முக்கால்வாசி பேர் உண்மையிலேயே மைனராக இருக்கிறார்கள், இல்லை என்றால் மண்டையில் மைனராக இருக்கிறார்கள். பொது வாழ்க்கை வேற, தனிப்பட்ட வாழ்க்கை வேற என்கிற பக்குவம் நமக்கு இருக்கிறது. இதனால், தேவையில்லாமல் கமெண்ட் பாக்ஸில் வந்து, ஐடி டீமை வைத்து, வல்கர் வாரியர்களை வைத்து அசிங்க அசிங்கமாக திட்டாமல், நான் ஒரு கருத்தை வைத்தால் அதற்கு எதிராக ஒரு கருத்தை வையுங்கள். அதுதானே ஜனநாயகம், இதையெல்லாம் ஜனநாயகனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X