twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாசுவிடம் உருகிய ஜோதிகா சந்திரமுகி வெற்றியால் ரஜினியைவிட மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஜோதிகா.இதுவரை எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், அதிலெல்லாம் கிடைக்காத மிகப் பெரிய பெயரும் புகழும்சந்திரமுகி மூலம் கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போய் இருக்கிறார்.தனது நல்ல நடிப்பை ஆர்பரித்து வரவேற்ற தமிழ் ரசிகர்கள் மீதான தனது மரியாதை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகக்கூறுகிறார்.தமிழ்ப் பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சந்திரமுகி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், அத்தகயை படத்தில்தான் முக்கியப் பங்காக இருந்தது குறித்து ஜோவுக்கு ரொம்பவே பெருமையாம்.சமீபத்தில் இயக்குனர் பி.வாசுவை அவரது வீட்டில் போய்ப் சந்தித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார் ஜோதிகா.இதுவரை 70 படங்கள் வரை நடித்துள்ளேன். எல்லாப் படங்களுமே நன்றாக ஓடியிருக்கின்றன, எனக்கும் நல்ல பெயரைவாங்கிக் கொடுத்துள்ளன. ஆனாலும், சந்திரமுகியில்தான் எனது நடிப்பு உண்மையிலேயே வெளியில் வந்தது.அந்த பெரும் வாய்ப்பைக் கொடுத்த உங்களை பாராட்டவே நேரில் வந்தேன் என்று கூறியுள்ளார் ஜோதிகா.அதற்கு வாசு, உங்களது திறமை உங்களை விட இயக்குனர்களாகிய எங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். உங்களுக்குள் இருந்ததிறமையைத்தான் வெளியே கொண்டு வந்தேன். அதை சிறப்பாக மெருகேற்றி நடித்தது நீங்கள்தான். உங்களுக்குத்தான் அந்தபெருமையில் முக்கால்வாசிப் போய்ச் சேர வேண்டும் என்றாராம்.மீண்டும் உங்களது படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் ஜோ கூற, நிச்சயமாக உங்களுக்கான ரோல் வருகிறபோதுகண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறி அனுப்பி வைத்தாராம் வாசு.மலையாளத்தில் உருவாகி அப்படியே கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னக மொழிகளில் ஒரு ரவுண்டு அடித்து விட்டசந்திரமுகி கதை அடுத்து இந்திக்குப் போகிறது.இந்தியிலும் வாசுவே இயக்கப் போகிறார் என்பதும் ரஜினி நடித்த வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கப் போகிறார் என்பதும்உங்களுக்குத் தெரிந்தது தான். அதற்கான ஸ்கிரிப்டில் வாசு பிசியாக உள்ளார். இதற்காக மும்பைக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக்கிறார்.ரஜினி அமெரிக்கா, இங்கிலாந்து பயணம்:இதற்கிடையே ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் லண்டன், நியூயார்க் நகரங்களில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார்.ரஜினியின் இளை மகள் செளந்தர்யா லண்டனில் மேல் படிப்பு படிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அவரை சினிமாவுக்கு இழுக்க ஒருபக்கம் முயற்சி நடந்தாலும் மகளை மேலும் படிக்க வைத்து திருமணம் செய்விக்கவே ரஜினி விரும்புகிறார்.அவர் சென்னையில் இருந்தால் சினிமா பார்ட்டிகள் தொல்லை தொடரும் என்பதால் லண்டனில் படிக்க வைக்க முடிவுசெய்துவிட்டார் ரஜினி. மகளுக்கு அட்மிஷன் வாங்கி, கல்லூரியில் சேர்த்துவிட்டு வர தனது மனைவி லதா, செளந்தர்யா சகிதம்லண்டன் செல்கிறார்.பின்னர் ரஜினியும், லதாவும் மட்டும் நியூயார்க் செல்கின்றனர். நியூயார்க்கில் ஆங்கில நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க ரஜினிதிட்டமிட்டுள்ளாராம்.புகழ்பெற்ற பிராட்வே மியூசிக்கல் குழுவின் இசை நிகழ்ச்சிகளையும் பார்க்கவுள்ளார் ரஜினி.நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் சென்னையிலிருந்து கிளம்புகின்றார்.

    By Staff
    |

    சந்திரமுகி வெற்றியால் ரஜினியைவிட மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஜோதிகா.

    இதுவரை எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், அதிலெல்லாம் கிடைக்காத மிகப் பெரிய பெயரும் புகழும்சந்திரமுகி மூலம் கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போய் இருக்கிறார்.

    தனது நல்ல நடிப்பை ஆர்பரித்து வரவேற்ற தமிழ் ரசிகர்கள் மீதான தனது மரியாதை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகக்கூறுகிறார்.

    தமிழ்ப் பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சந்திரமுகி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், அத்தகயை படத்தில்தான் முக்கியப் பங்காக இருந்தது குறித்து ஜோவுக்கு ரொம்பவே பெருமையாம்.

    சமீபத்தில் இயக்குனர் பி.வாசுவை அவரது வீட்டில் போய்ப் சந்தித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார் ஜோதிகா.

    இதுவரை 70 படங்கள் வரை நடித்துள்ளேன். எல்லாப் படங்களுமே நன்றாக ஓடியிருக்கின்றன, எனக்கும் நல்ல பெயரைவாங்கிக் கொடுத்துள்ளன. ஆனாலும், சந்திரமுகியில்தான் எனது நடிப்பு உண்மையிலேயே வெளியில் வந்தது.

    அந்த பெரும் வாய்ப்பைக் கொடுத்த உங்களை பாராட்டவே நேரில் வந்தேன் என்று கூறியுள்ளார் ஜோதிகா.

    அதற்கு வாசு, உங்களது திறமை உங்களை விட இயக்குனர்களாகிய எங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். உங்களுக்குள் இருந்ததிறமையைத்தான் வெளியே கொண்டு வந்தேன். அதை சிறப்பாக மெருகேற்றி நடித்தது நீங்கள்தான். உங்களுக்குத்தான் அந்தபெருமையில் முக்கால்வாசிப் போய்ச் சேர வேண்டும் என்றாராம்.

    மீண்டும் உங்களது படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் ஜோ கூற, நிச்சயமாக உங்களுக்கான ரோல் வருகிறபோதுகண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறி அனுப்பி வைத்தாராம் வாசு.

    மலையாளத்தில் உருவாகி அப்படியே கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னக மொழிகளில் ஒரு ரவுண்டு அடித்து விட்டசந்திரமுகி கதை அடுத்து இந்திக்குப் போகிறது.

    இந்தியிலும் வாசுவே இயக்கப் போகிறார் என்பதும் ரஜினி நடித்த வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கப் போகிறார் என்பதும்உங்களுக்குத் தெரிந்தது தான். அதற்கான ஸ்கிரிப்டில் வாசு பிசியாக உள்ளார். இதற்காக மும்பைக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக்கிறார்.

    ரஜினி அமெரிக்கா, இங்கிலாந்து பயணம்:

    இதற்கிடையே ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் லண்டன், நியூயார்க் நகரங்களில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார்.

    ரஜினியின் இளை மகள் செளந்தர்யா லண்டனில் மேல் படிப்பு படிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அவரை சினிமாவுக்கு இழுக்க ஒருபக்கம் முயற்சி நடந்தாலும் மகளை மேலும் படிக்க வைத்து திருமணம் செய்விக்கவே ரஜினி விரும்புகிறார்.

    அவர் சென்னையில் இருந்தால் சினிமா பார்ட்டிகள் தொல்லை தொடரும் என்பதால் லண்டனில் படிக்க வைக்க முடிவுசெய்துவிட்டார் ரஜினி. மகளுக்கு அட்மிஷன் வாங்கி, கல்லூரியில் சேர்த்துவிட்டு வர தனது மனைவி லதா, செளந்தர்யா சகிதம்லண்டன் செல்கிறார்.

    பின்னர் ரஜினியும், லதாவும் மட்டும் நியூயார்க் செல்கின்றனர். நியூயார்க்கில் ஆங்கில நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க ரஜினிதிட்டமிட்டுள்ளாராம்.

    புகழ்பெற்ற பிராட்வே மியூசிக்கல் குழுவின் இசை நிகழ்ச்சிகளையும் பார்க்கவுள்ளார் ரஜினி.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் சென்னையிலிருந்து கிளம்புகின்றார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X