»   »  ஜோ.வின் மொழி!

ஜோ.வின் மொழி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகா வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள மொழி படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்தைநவம்பரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நிஜத்திலும் சூர்யாவுடன் ஜோடி சேரப்போகும் ஜோதிகா தனது கைவசம் இருந்த படங்கள் அத்தனையையும்வேகம் வேகமாக நடித்து முடித்து விட்டார். கடைசியாக அவரது கைவசம் இருந்த படம் மொழி மட்டுமே. காதுகேளாத, வாய் பேசடியாத பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாகடிந்து விட்டது. இதையடுத்து நவம்பரில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.ஜோதிகாவுக்கு ஜோடியாக பிருத்வி ராஜ் நடித்துள்ளார். அத்துடன், பிரகாஷ் ராஜும் வித்தியாசமான பாத்திரத்தில்நடித்துள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

அழகிய தீயே படத்தை இயக்கிய ராதாமோகன்தான் இப்படததை இயக்கியுள்ளார். ஜோதிகாவின் சிறப்பாநடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜோவுக்கு அவார்ட் வாங்கி தரும் என்று படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்.ஜோவைப் புகழும் ஒரு பாட்டையும் இப்படத்திற்காக வைரத்து தீட்டியுள்ளார்.

ஜோதிகாவுக்கு சிறந்த கல்யாணப் பரிசாக இப்படம் அமையும் என மொழி யூனிட் நம்பிக்கையுடன் கூறுகிறது.சூர்யாவை விட சிறந்த பரிசு ஜோதிகாவுக்குக் கிடைத்து விடுமா என்ன.?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil