''கமல்ஹாசனைப் பார்ப்பது போலவே உங்களைப் பார்க்கிறேன்' எம்.எஸ்.பாஸ்கரிடம் சொன்ன ஜோதிகா!
நடிகை ஜோதிகா எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பை புகழ்ந்துள்ளார்
சென்னை: கமல்ஹாசனின் நடிப்பை கவனிப்பதுபோலவே எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பையும் கவனிப்பேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
வித்யாபாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'துமாரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரிமேக்காக தாயாராகியுள்ள படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது நடிகை ஜோதிகா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ரோல் மாடல்
ஜோதிகாவிற்கு யார் ரோல் மாடல் எனக் கேட்கப்பட்டதற்கு இரண்டு அம்மாக்கள் என பதிலளித்தார். அவருடைய அம்மா பல விஷயங்களைக் கற்று கொடுத்ததாகவும், குடும்பத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பது, வேலையையும் குடும்பத்தையும் எப்படி சரி விகிதத்தில் நிர்வகிப்பது போன்ற விஷயங்களை அவருடைய மற்றொரு அம்மாவான மாமியார் சொல்லிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

புரிதல்
காற்றின் மொழி திரைப்படத்தை பொருத்தவரை கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் தான் கதை. அதுதான் அப்படத்தில் மிக பிடித்த விஷயம் எனக் கூறிய ஜோதிகா, மிகவும் பிடித்த இயக்குனர் ராதாமோகன் எனத் தெரிவித்தார். படம் முழுக்க படப்பிடிப்பு நடந்ததுபோல் ஒரு உணர்வே இல்லை என்றும், எப்போதுமே ஜாலியாக சிரித்துக்கொண்டே இருந்ததாகவும், படத்தின் முக்கிய காட்சி ஒன்றை ராதாமோகன் ஒரு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிட்டதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
இப்படத்தில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். என்னை பாட வைக்க வேண்டுமென நினைத்து ராதாமோகன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார் என பெருமைப் பட்ட ஜோதிகா, எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பை வெகுவாக புகழ்ந்தார். கமல்ஹாசன் நடிக்கும்போது எப்படி மெய்மறந்து பார்ப்பேனோ அப்படித்தான் பாஸ்கர் சாரின் நடிப்பையும் பார்ப்பேன். ஷாட் சொன்ன உடன் அவர் கிளிசரின் இல்லாமலே அழக்கூடியவர் என்றார். மேலும், அவரிடமிருந்து எப்போதுமே கற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சூர்யா
விதார்த் பற்றி பேசிய ஜோதிகா, அவர் மிக அடக்கமாக பேசுகிறார். நான் ஒரு காட்சியை ஒரே டேக்கில் நடித்தாலும் நடித்தாலும் அதே போல் விதார்த்தும் நடித்தார் என பாராட்டினார். மேலும் சூர்யா, அஜித், மாதவன் ஆகியோருடன் பணியாற்றும்போது இருந்த கம்பஃர்ட், விதார்த்துடன் பணியாற்றும்போது இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











