ஜோதிகா யாருடன் ஜோரா ஹோலி கொண்டாடியிருக்காரு பாருங்க.. மும்பைக்கு போய் செம ஃபன் பண்றாரே!

மும்பை: பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர். கோலிவுட்டிலும் யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, சாக்‌ஷி அகர்வால் போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஹோலி பண்டிகையை கவர்ச்சி பொங்க கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை ஜோதிகா அளித்து வரும் பேட்டிகள் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறியதில் இருந்து தமிழ் சினிமாவில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Jyothika and Nagma celebrates holi with their family

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான டப்பா கார்ட்டல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகா தெனிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் இயக்குனர்கள் பெண்களுக்கான கதைகளை உருவாக்குவதில்லை என்றும் குறை கூறியிருந்தார். ஹோலி பண்டிகை முன்னிட்டு தனது அம்மா வீட்டில் குடும்பத்துடன் அவர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நக்மா வெளியிட்ட புகைப்படங்கள்: நடிகை ஜோதிகா ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடாத நிலையில், அவரது சகோதரியான நடிகை நக்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கை ஜோதிகாவுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Jyothika and Nagma celebrates holi with their family

ஜோதிகா உடம்பெல்லாம் கலர் பொடி: மும்பைக்கு சென்று குடும்பத்துடன் குடியேறியுள்ள நடிகை ஜோதிகா தனது அம்மா வீட்டுக்கு சென்று தனது பெற்றோர்களுடனும் தனது சகோதரி நக்மாவுடனும் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ளது. நக்மா மற்றும் ஜோதிகா உடல் முழுவதும் கலர் பொடிகளை பூசிக்கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.

சூர்யா மற்றும் குழந்தைகள் காணோம்: ஜோதிகா நக்மாவுடன் ஹோலி கொண்டாடிய நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியாவின் புகைப்படங்களை நக்மா வெளியிடவில்லை. ஹோலி கொண்டாட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லையா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காகவும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காகவும் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்காகவும் தன்னை தயார் படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

சினிமாவை விட்டு விலகிய நக்மா: 1990ம் ஆண்டு இந்தியில் வெளியான பாகி எ ரிபெல் ஃபார் லவ் படத்தின் இந்தியில் அறிமுகமானவர் தான் நடிகை நக்மா. அந்த படத்திற்கு பிறகு இந்தியில் சில படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான காதலன் படத்தின் மூலம் அறிமுகமானார். பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, அரவிந்தன், பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு அஜித்தின் தீனா படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸராக நடனம் ஆடினார். சிட்டிசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நக்மா அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். போஜ்புரியில் சில படங்களில் நடித்து வந்தவர் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியல் பக்கம் திரும்பினார்.

Take a Poll

திருமணமே செய்யவில்லை: சிலருடன் காதல் கிசுகிசுகளில் சிக்கிய நடிகை நக்மா, இதுவரை யாரையும் திருமணம் செய்துக்கொள்ளாமல் பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். அரசியலில் அதிக ஈடுபாட்டை அவர் காட்டிய நிலையில் தான் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். 50 வயதை கடந்த விட்ட நக்மா மீண்டும் தங்கை ஜோதிகாவை போல சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாட்ஷா: 1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தை ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்துக்குப் பிறகு நக்மாவுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் படமென்றால் அந்த படத்தை தான் ரசிகர்கள் சொல்வார்கள். சூப்பர் ஸ்டார் கரியரிலேயே அவருக்கு பிடித்த படமாகவும் தமிழ் சினிமா கேங்ஸ்டர் படங்களிலேயே நம்பர் ஒன் கமர்ஷியல் படமாகவும் இன்றளவும் இருப்பது அந்த படம் தான்.

வெப்சீரிஸ் மற்றும் பாலிவுட் படங்கள்: நடிகை நக்மா நடிப்பதை நிறுத்தினாலும் ஜோதிகா தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்காக சிறிது காலம் இடைவெளிவிட்ட அவர் 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். மும்பைக்கு குடிபெயர்ந்த ஜோதிகா தற்போது இந்தியில் வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஷைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து அசத்திய அவர் டப்பா கார்ட்டெல் வெப்தொடரிலும் ஸ்கோர் செய்துள்ளார். அடுத்ததாக அமேசான் பிரைமுக்கும் ஒரு வெப்சீரிஸ் நடித்துக் கொடுத்துள்ளார். அதன் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். மேலும், அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் வெளியான ஷைத்தான் 2ம் பாகமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகா போல சூர்யாவும் இந்தி படங்களில் நடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

தமன்னா முதல் கத்ரீனா கைஃப் வரை: நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர். நடிகை தமன்னா விஜய் வர்மாவுடன் இணைந்து ரவீனா டாண்டன் நடத்திய ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. கத்ரீனா கைஃப் தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சோனா சின்ஹா, ஷெர்லின் சோப்ரா என ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகள் உடல் முழுவதும் கலர் பூசி கொண்டிருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஜோதிகா மற்றும் நக்மாவின் ஹோலி கொண்டாட்டத்தை பார்த்த ரசிகர்கள் இன்னமும் இருவரும் அழகு குறையாமல் அப்படியே இருக்கின்றனர் என்றும் இப்போதான் டிவியில் பாட்ஷா படம் பார்த்தோம் என்றும் நக்மாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X