ஜோதிகாவும் சாய் அபயங்கர் ரசிகையா?.. அவங்களும் லிஸ்ட்டில் சேர்ந்துட்டாங்களோ.. வேற லெவல்

சென்னை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா; தன்னுடைய பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் தனது கவனத்தை குறைத்து பாலிவுட்டில் அதிகம் செலுத்திவருகிறார். அதன் காரணமாக சூர்யா மற்றும் குழந்தைகளோடு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் வீடியோவை வைத்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

மும்பையை சேர்ந்த ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாதான் பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஹீரோக்களுடன் டூயட் மட்டும் பாடாமல் சந்திரமுகி, மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ரோல்களில் நடித்து அசத்தினார். கிளாமர், ஹோம்லி என கலக்கிவந்த அவர் சூர்யாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார். திருமணம் செய்துகொண்டு செட்டிலானதால் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்திருந்தார்.

மீண்டும் வந்த ஜோதிகா: குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க வந்தார் அவர். முதல் இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் அவ்வப்போது நடித்த ஜோ; இரண்டாவது இன்னிங்ஸில் முழுக்க முழுக்க அது மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் தமிழில் 36 வயதினிலே, உடன்பிறப்பே, ராட்சசி, பொன்மகள் வந்தாள் என வரிசையாக நடித்தார். அந்தப் படங்கள் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸையும் பெறத்தான் செய்தன.

Jyothika Edits Sai Abhyankar s Song into Suriya 47 Pooja Video Fans Get Excited
Photo Credit:

ஹிந்தியில் கவனம்: ஆனாலும் அவரது முழு கவனமும் இப்போது ஹிந்தியில்தான் இருக்கிறது. அவர் நடித்த ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஹிந்தி படங்கள் பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக்கொடுக்கவில்லைதான். ஆனாலும் பாலிவுட்டை விடாமல் பிடித்துவருகிறார். தன் கணவர் குழந்தைகளோடு மும்பையிலேயே செட்டிலும் ஆகியிருக்கிறார். தான் மட்டுமின்றி தன்னுடைய கணவர் சூர்யாவையும் பாலிவுட்டில் பெரிய நட்சத்திரம் ஆக்கிவிட வேண்டும் என்பதால்தான் அங்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது.

பிரச்னையா?: ஆனால் அதெல்லாம் காரணம் இல்லை; இங்கு சிவக்குமாருடன் ஜோதிகாவுக்கு சண்டை. சென்னைக்கு வந்தால்கூட வீட்டுக்கு வருவதில்லை என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். அதனை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்தார். தனக்கும் சிவக்குமாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை; அவர்தான் என்னை மீண்டும் நடிக்க சொன்னார் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா 47 பட பூஜை நடைபெற்றது.

ஜோதிகாவின் இன்ஸ்டா ஸ்டோரி: அந்தப் பூஜையில் ஜோதிகாவும் கலந்துகொண்டார். இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவுடன் ட்யூட் படத்தில் சாய் அபயங்கர் இசையமைத்த என் மூச்சவ பேச்சவ பாடலையும் சேர்த்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ ஜோ மேடமும் சாய் அபயங்கர் ரசிகையாக மாறிட்டாங்களோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

சாய் அபயங்கர் அலை: முன்னதாக திப்பு - ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் புதிய சென்சேஷனலாக தமிழ் திரையிசையில் மாறியிருக்கிறார். அவர் இசையமைத்த டியூட் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக சூர்யா நடித்திருக்கும் கருப்பு படத்துக்கும் அவர்தான் இசை. அதுமட்டுமின்றி அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்துக்கும் இசையமைப்பாளராக சாய்தான் கமிட்டாகியிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X