ஜோதிகாவுக்கு 47 வயதா?.. யாருமே நம்பமாட்டாங்க.. இந்த வயதில் இவ்வளவு ஸ்பீடா?.. சூர்யா தோத்துடுவாரோ

சென்னை: நடிகை ஜோதிகா தமிழில் முன்னணி ஹீரோயினாக கொடி கட்டி பறந்தவர். சூர்யாவை காதலித்து திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவர்; சில வருடங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர் சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு; ஹிந்தியில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அதுமட்டுமின்றி தனது கணவர், குழந்தைகளுடன் மும்பையிலேயே செட்டிலும் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையை சேர்ந்த ஜோதிகா நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். ஆனால் அதற்கும் முன்னதாகவே வாலி படம் ரிலீஸானதால் அதுதான் திரைக்கு வந்த அவரது முதல் படம். இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் வாலி படத்தில் அவர் ஏற்றிருந்த சோனா கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் பெரிய இம்பேக்ட்டை கிரியேட் செய்ததன் காரணமாக உடனடியாக கவனத்தை ஈர்த்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று சரசரவென்று வளர்ந்தார்.

சூர்யாவுடன் காதல் டூ திருமணம்: அதன்படி விஜய், அஜித், கமல், விக்ரம், சிம்பு என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து டாப் நடிகையாக வளர்ந்த அவர்; தெலுங்கிலும் தனது தடத்தை தீவிரமாகவே பதித்தார். இதற்கிடையே முதல் படத்தில் நடித்தபோதே சூர்யாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்த அவர்கள் வீட்டு சம்மதத்தை போராடி பெற்று கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

Jyothika Focuses on Bollywood Settles in Mumbai with Family Intense Gym Workout Video Goes Viral
Photo Credit:

ஃபேவரைட் ஜோடி: திருமணமாகி குழந்தைகள் பிறந்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; பிள்ளைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு சூர்யாவும், அவரது குடும்பத்தினரும் ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தார்கள் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தாலும்; அவரால் சிவக்குமார் வீட்டில் பிரச்னை அதனால்தான் குடும்பத்துடன் மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள் ஒருதரப்பினர்.

அதெல்லாம் இல்லை; காரணம் வேறு: ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்று தெரிகிறது. தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கோலிவுட்டில் சில படங்களில் நடித்த அவர்; முழுக்க முழுக்க தனது கவனத்தை பாலிவுட்டில் செலுத்திவருகிறார். அப்படி அவர் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் மட்டுமின்றி தனது கணவர் சூர்யாவையும் பாலிவுட்டில் நிலைக்க வைக்க அவர் நினைப்பதாகவும்; தன்னுடைய தாய் அங்கு இருப்பதாலும் கணவர், குழந்தைகளோடு மும்பையில் இப்போதைக்கு செட்டில் ஆகியிருக்கிறாரே ஒழிய சண்டையால் அல்ல என்று தெரிகிறது.

தீவிரமான ஒர்க் அவுட்: இதற்கிடையே சினிமாவில் எப்படி ஆக்டிவ்வாக இருக்கிறாரோ அதேபோல் தன்னுடைய உடல்நலத்தை பராமரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் ஜோ. அந்தவகையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். படு வேகமாக அந்த ஒர்க் அவுட்டை செய்கிறார் ஜோதிகா. இதனை பார்க்கும்போது அவருக்கு 47 வயது மாதிரியே தெரியவில்லை. சூர்யாவும் வெறித்தனமான ஜிம் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வீடியோவை பார்த்த ரசிகர்களோ போகிற போக்கை பார்த்தால் ஒர்க் அவுட்டில் சூர்யாவையே ஜோதிகா முந்திவிடுவாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X