Jyothika: ஜோதிகாவுக்கு 47 வயசுனு சொன்னா யாரு நம்புவாங்க? ஒர்க்- அவுட்ல சூர்யா தள்ளித்தான் நிற்கனும் போல

சென்னை: நடிகை ஜோதிகா இந்திய அளவில் அறியப்படும் ஒரு பான் இந்தியா ஸ்டாராக உள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து தான் தனது சினிமா கெரியரை தொடங்கினாலும், தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார். 10 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் 100 ரூபாய்க்கு நடிப்பார் என்று எல்லாம் இவரை பலரும் கிண்டல் செய்துள்ளனர். ஜோதிகா தனது திறமையான நடிப்பால் பல படங்களை வெற்றி பெற காரணமாகி உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் ஜோதிகா முன்னணி நடிகையாக இருக்கும் போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் தியாவின் படிப்புக்காக மும்பைக்கு திரும்பவும் சென்ற ஜோதிகா பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வெற்றிகளைக் குவித்தார்.

Actress Jyothika impresses fans with her intense workout video showcasing incredible fitness and style at 47 trending widely on social media

அப்போது அவர் அளித்த சில பேட்டிகள் தென்னிந்திய சினிமாவில் பெரும் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா. நான் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். ஆனால் பல படங்களின் போஸ்டரில் எனது போட்டோ இருக்காது, பல படங்களில் எனது போட்டோவை நானே தேடிப் பிடிக்க வேண்டியதாக இருக்கும் என்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். இவரது இந்த காத்திரமான விமர்சனத்திற்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களோ, இயக்குநர்களோ பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

ஜோதிகா: சிறந்த நடிகை மட்டுமல்லாமல் துணிச்சலான நடிகையும் கூட என்று ஜோதிகாவை கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் விருது நிகழ்ச்சி ஒன்றில், நாம் கோவில்களுக்கு செலவு செய்வதில் கொஞ்சம் பணத்தை மருத்துவமனைகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் இந்துத்துவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தான் சொன்ன கருத்தில் பின் வாங்காத மன உறுதி கொண்டவராக இருந்தார்.

Actress Jyothika impresses fans with her intense workout video showcasing incredible fitness and style at 47 trending widely on social media

செம ஃபிட்னஸ்: இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் தென்னிந்திய படங்களிலும் கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அமேசான் பிரைம் நடத்திய நிகழ்ச்சியில் செம ஸ்டைலாக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம் ஜோதிகாவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. ஆனால் அவரது தோற்றத்தைப் பார்த்தால் யாருமே அவருக்கு 47 வயது ஆகிவிட்டது என்று சொல்ல மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு ஸ்டைலாக வந்ததைக் காட்டிலும் செம ஃபிட்டாக காட்சி அளித்தார். சமகால டாப் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருந்தது.

சூர்யாவை ஓவர் டேக்: இதைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். இப்படி இருக்கையில் ஜோதிகா இந்த அளவுக்கு ஃபிட்டாக இருக்க காரணம் அவரது உடற்பயிற்சி தான் என்று கூறும் அளவுக்கு ஜோதிகாவின் ஒர்க் -அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுவும் ஜோதிகா முரட்டுத்தனமாக இன்னும் சொல்லப்போனால் வொர்க் அவுட்டில் சூர்யாவை ஓரம் கட்டிடுவார் போல என்று கூறும் அளவுக்கு ஒர்க் அவுட் செய்து கொண்டு உள்ளார். விட்டால் சிக்ஸ் பேக்ஸ் வைப்பார் போல எனவும் சிலர் வியந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X