என் மகனுக்கு ஹிந்தி பிடிக்காது.. நஹி அம்மானு சொல்வான்.. ஜோதிகா இப்படியும் சொல்லிருக்காங்களா?
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். ஜோதிகாவும் சூர்யாவும் ஹிந்தி சினிமாக்களில் தங்களது கவனத்தை திருப்பியிருக்கிறார்கள். சமீபத்தில்கூட ஜோ டப்பா கார்ட்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானாலும் 200 கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லை. இதனால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் ரெட்ரோ படமும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படமும் வெளியாகவிருக்கிறது.

காதல் வாழ்க்கை: இதற்கிடையே அவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின் இருவரும் தங்களது வாழ்க்கையை மிக சிறப்பாக நகர்த்திவருகிறார்கள். ஜோதிகாவும் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி குழந்தைகள், குடும்பத்தை பார்த்துவந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிந்தியில் அவர் கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
சிறந்த கணவர்: ஜோதிகா சூர்யாவை ஏகப்பட்ட மேடைகளில் புகழ்ந்திருக்கிறார். அதாவது தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். அதேபோல் ஜோதிகா குறித்தும் சூர்யா பல மேடைகளில் புகழ்ந்து பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் சென்னையிலிருந்து குடிபெயர்ந்து மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
என்ன காரணம்?: இதற்கு காரணம் பிரச்னைதான் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் அதனை இரண்டு பேருமே மறுத்தார்கள். முக்கியமாக கங்குவா ப்ரோமோஷன் ஒன்றில் பேசியபோது, "ஜோதிகா எனக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். அவரது தாய், தந்தையை விட்டுவிட்டு பல வருடங்கள் எனக்காக சென்னையில் இருந்தார். இப்போது அவருக்காக மும்பையில் இருந்தால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனோம்" என்று தெரிவித்திருந்தார்.
ஜோதிகாவின் பேட்டி?: இந்நிலையில் ஜோதிகா சொல்லியிருப்பதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதாவது அவர் ஒரு பேட்டியில், "எனது மகள் நன்றாக ஹிந்தி பேசுவாள். ஆனால் எனது மகனுக்கு ஹிந்தி பிடிக்காது. ஹிந்தி நஹி அம்மா என்று சொல்லிவிடுவான். நானும், சூர்யாவும் அதிகம் தமிழில்தான் பேசிக்கொள்கிறோம். எந்த மொழியென்றாலும் அதனை கற்றுக்கொள்வது என்பது அவர்களது உரிமை. அதனை திணிக்கக்கூடாது" என்று கூறியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











