அந்த மாதிரி படங்களில் நானா?.. அதெல்லாம் எப்போவோ நிறுத்திட்டேன்.. ஜோதிகா ஓபன் டாக்
மும்பை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சில வருடங்கள் குழந்தைகளுக்காக சினிமாவிலிருந்து நடிப்பதை நிறுத்தியிருந்தார். அதற்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அவர் உடன்பிறப்பே, நாச்சியார், 36 வயதினிலே, ராட்சசி என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் நடித்தார். பிறகு ஹிந்திக்கு சென்ற அவர் அங்கும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் (Dabba Cartel) என்ற வெப் சீரிஸ் வெளியாகவிருக்கிறது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிகா தமிழில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது சூர்யாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இரண்டு பேரும் பல வருடங்கள் காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கிறார்கள். கோலிவுட்டின் மோஸ்ட் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக சூர்யாவும் ஜோதிகாவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் ரீ என்ட்ரி: திருமணத்துக்கு பிறகு குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்திய ஜோதிகா சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்துக்கு பிறகு நாச்சியார், உடன்பிறப்பே, காற்றின் மொழி, ராட்சசி என தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் நடித்துவருகிறார். அவர் மீண்டும் நடிக்க வந்தது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியையே கொடுத்திருக்கிறது. சூர்யாவும் அவருக்கு முழு சப்போர்ட்டாக இருந்துவருகிறார்.
மும்பையில் செட்டில்: இத்தனை வருடங்கள் சென்னையில் இருந்த சூர்யாவும் ஜோதிகாவும் சமீபமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பிரச்னைதான் என்று கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அதனை திட்டவட்டமாக இரண்டு பேரும் மறுத்தார்கள். முக்கியமாக ஜோதிகா இத்தனை வருடம் எனக்காக சென்னையில் இருந்தார்; இப்போது அவருக்காக மும்பைக்கு நான் சென்றதில் என்ன தவறு என கேட்டு சூர்யா அனைவரின் வாயையும் மூடினார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஜோதிகாவும், சூர்யாவும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாலிவுட்டில் கவனம்: அப்படி பாலிவுட்டில் முழு கவனம் செலுத்த மும்பையில் இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்பதால் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள் என்கிற பேச்சும் ஓடுகிறது. ஜோதிகா கடைசியாக ஷைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு ஹிந்தி படங்களில் நடித்தார். தற்போது Dabba Cartel என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அந்த சீரிஸ் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில்; நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜோதிகா.
ஜோதிகா பேச்சு: அப்போது பேசிய அவர், "காதல் மையப்படுத்திய படங்கள், ஹீரோக்களுடன் டூயட் பாடும்படியான படங்களில் நடிப்பதை நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன். இப்போது எனக்கு 47 வயதாகிறது. ஹீரோக்களை சுற்றி ஓடுவது, காதல் மையமான படங்கள் எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. இந்த வெப் சீரிஸ் பெண்களுக்கு தேவையான ஒன்று. பெண்களின் பார்வையிலிருந்து இந்த வெப் சீரிஸை சொல்லியிருக்கிறார்கள். இதுவரை இப்படி ஒரு கதை வந்தது கிடையாது.
வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் இதில் பேசியிருக்கிறோம். என்னுடைய கேரக்டர் நல்ல ஆழமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பல பெண்கள் இந்த வெப் சீரிஸில் என்னுடைய கேரக்டருடன் கனெக்ட் ஆவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











