சூர்யாவை திருமணம் செய்துகொள்ள இதுதான் காரணம்.. ஓபனாக சொன்ன ஜோதிகா
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யாவை திருமணம் செய்துகொண்டது எதற்காக என்பது குறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்..
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஷைத்தான் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.
ஜோதிகா பேட்டி: ஜோதிகா கடைசியாக ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சூர்யா குறித்து ஜோதிகா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜோதிகா பேசுகையில், "சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். கண்டிப்பாக பெரிய ஆச்சரியத்தை இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் பார்க்கவிருக்கின்றனர்.
இதுதான் காரணம்: சூர்யா ஒரு அற்புதமான மனிதர். 200 சதவீதம் உழைப்பை இந்தப் படத்துக்காக அவர் கொடுத்திருக்கிறார். நான் அவரை திருமணம் செய்துகொண்டதற்குகூட இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். சினிமா மட்டுமில்லாமல் கணவனாகவும், தந்தையாகவும் அனைத்திலும் அவர் 200 சதவீத ஈடுபாட்டை காட்டக்கூடியவர். இந்தப் படத்துக்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை" என்று தெரிவித்தார். முன்னதாக, சூர்யாவும், ஜோதிகாவும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று ஒரு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











