தொடர் கமிட்மெண்ட்டுகள்.. பாலிவுட்டில் சம்பளத்தை உயர்த்திட்டாரா ஜோதிகா?.. இத்தனை கோடியா?
சென்னை: நடிகை ஜோதிகா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஏரளாமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஷைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஜோதிகா வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி; பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தால் ஃபேமஸ் ஆனார். அந்தப் படத்தில் நடித்தபோது சூர்யாவை காதலிக்க ஆரம்பித்தார். பொதுவாக காதலில் விழுந்தால் சினிமா கரியரில் கவனம் செலுத்த தவறும் நடிகைகளுக்கு மத்தியில் ஜோதிகாவோ காதலில் இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். அப்படி அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

காத்திருப்பு: ஒருபக்கம் சினிமாவில் பிஸி; மறுபக்கம் காதலில் பிஸி என சுற்றிக்கொண்டிருந்த ஜோதிகாவுக்கு இடியாக; சூர்யா வீட்டில் காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் காத்திருந்து; வீட்டில் பொறுமையாக எடுத்து சொல்லி சிவக்குமாரை ஒத்துக்கொள்ள வைத்தனர். பிறகு 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். சூர்யாவும், ஜோதிகாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உச்சக்கட்ட காதலோடு திருமண வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.
மும்பைக்கு ஷிஃப்ட்: நிலைமை இப்படி இருக்க ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த அவர் ஹிந்தியிலும் இப்போது கவனம் செலுத்துகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு ஷைத்தான் படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ரீகாந்த் என்ற படம் வெளியானது. இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஜோதிகாவின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக வாய்ப்புகள்: இப்படி ஜோதிகா கடைசியாக நடித்த இரண்டு பாலிவுட் படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக அவரது முழு கவனமும் இப்போது பாலிவுட் பக்கம் இருக்கிறது. தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விரைவில் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
சம்பள உயர்வு: இதற்கிடையே தமிழில் சூர்யாவுடன் சேர்ந்து ஒரு ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசையிருப்பதாகவும்; ஆனால் அப்படி இயக்கும் இயக்குநர்கள் தமிழில் கம்மியாகிவிட்டார்கள். சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமீம்தான் அப்படி இயக்குகிறார் என்று ஓபனாகவே கூறியிருந்தார் ஜோ. இதனால் ஹலிதா இயக்கத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஜோதிகா பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பாலிவுட்டில் நடிப்பதற்கு இப்போது தனது சம்பளத்தை உயர்த்தி 5 கோடி ரூபாய் என்று அவர் ஃபிக்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வதந்தி: முன்னதாக, சூர்யாவும் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால்; இருவரும் சென்னையிலிருந்து மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டனர் திடீரென இரண்டு பேரும் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனதால் சூர்யா குடும்பத்துக்குள் புகைச்சல்; சிவக்குமாரிடமிருந்து சூர்யாவை ஜோதிகா பிரித்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி ஜோதிகா நடிப்பது சிவக்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











