twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லெண்ணெய் தூதராக இருந்து… நல்லெண்ண தூதராக மாறிய ஜோதிகா!

    பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் தமிழக அரசின் பிரசாரத் தூதராக ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

    |

    சென்னை: நடிகை ஜோதிகா தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நடிகை, குடும்பத்தலைவி, அம்மா என பல பொறுப்புகள் உள்ளன ஜோதிகாவுக்கு. இப்போது இன்னொரு பொறுப்பும் வந்துள்ளது.

    Jyothika new responsibility!

    குஷி திரைப்படத்தில் ஜோதிகாவை பார்த்தபோது எப்படி ரசிகர்கள் குஷியானார்களோ அதே புத்துணர்வையும், எனர்ஜியையும் இன்றளவும் பராமரித்து வருபவர் நடிகை ஜோதிகா. இடையில் சில காலம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் தோன்றி எல்லோர் வீடுகளையும் ஆக்கிரமித்தார்.

    36 வயதினிலே திரைப்படத்திற்கு பிறகு ஜோதிகாவுக்கு மவுசு இரட்டிப்பானது. இப்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஜோதிகா, தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் திட்டத்திற்கு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இன்று தலைமைச் செயலகத்தில் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

    இதற்கான விளம்பரத் தூதராக விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Actress Jyothika take up the responsibility creating awareness about plastic-free tamilnadu along with Surya, Karthi and Vivek.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X