அந்த ஒரு சம்பவத்தால்தான் பாலிவுட்டிலிருந்து விலகினேன்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த ஜோதிகா
சென்னை: நடிகை ஜோதிகா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஏரளாமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஷைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் பல வருடங்கள் கழித்து ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்தது குறித்து ஜோதிகா பேசியிருக்கிறார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது சூர்யாவை காதலிக்க ஆரம்பித்தார் ஜோதிகா. அவர்களது திருமணம் பல வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த 2006ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். சூர்யாவும், ஜோதிகாதிருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

ஜோதிகாவின் பெருமை: சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஷைத்தான் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.
ஜோதிகா பேட்டி: ஜோதிகா இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ஷைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து ஹிந்திக்கு ஜோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அதுகுறித்து பேசியிருக்கும் அவர், "இத்தனை வருடங்களில் ஹிந்தி படங்களிலிருந்து எனக்கு வாய்ப்பு வரவில்லை. 27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்தியாவில் மட்டுமே வொர்க் செய்தேன்.
முதல் படம்: என்னுடைய முதல் படமே ஹிந்தி படம்தான். அது திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. அது வழக்கமான ஃபார்முலாவில் இருந்தது. உங்களுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு வேண்டுமென்றால் உங்களது முதல் படம் நன்றாக ஓட வேண்டும். நான் நடிக்க வந்தபோது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென ஹீரோயின்களை செலக்ட் செய்துகொண்டு அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தார். நல்ல வேளை அப்போது தென்னிந்திய பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
விலகிவிட்டேன்: தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு பாலிவுட்டிலிருந்து விலகிவிட்டேன். நான் நடித்த ஹிந்தி படம் பெரிதாக வசூலிக்கவும் இல்லை. ஆனால் எனது நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்தி படங்களில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை. நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்திய படங்களில் மட்டுமே பணியாற்றினேன். பாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. பாலிவுட்டில் உள்ளவர்களும் நான் ஒரு தென்னிந்தியர் என்றேதான் நினைத்தார்கள். இனிமேல் நான் ஹிந்தி படங்களில் நடிக்கமாட்டேன் என்று முடிவு செய்தார்கள்.
வாய்ப்புகளை பயன்படுத்தினேன்: தென்னிந்திய சினிமாக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன். எனது திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது. ஹிந்தி படத்தை நான் தவிர்த்தது இல்லை. இத்தனை வருடங்களாக எனக்கு ஏற்ற கதைகள் எதுவும் அமையவில்லை என்பதுதான் உண்மை" என்றார்.


Click it and Unblock the Notifications











