சூர்யா பற்றி ஜோதிகா இப்படி சொல்றாரே?..திருமணத்துக்கு பிறகுதான் பாகுபாடாம்.. பஞ்சாயத்து கன்ஃபார்ம்?

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வருபவர்கள் சூர்யாவும், ஜோதிகாவும். இத்தனை வருடங்கள் சென்னையில் இருந்த அவர்கள் தற்போது மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். ஜோதிகா டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்து முடித்திருக்கிறார். அந்த சீரிஸ் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில்; ப்ரமோஷனில் கலந்துகொண்ட அவர் சூர்யா குறித்து பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யாவும், ஜோதிகாவும் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில்தான் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி அப்போதிருந்தே இரண்டு பேரும் காதலிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து பல வருடங்கள் காதலித்து வந்த அவர்களுக்கு உடனடியாக வீட்டு சம்மதம் கிடைக்கவில்லை. முக்கியமாக சூர்யாவின் தந்தை சிவக்குமார் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார். ஆனால் இருவரும் உறுதியாக இருந்ததால் சிவக்குமார் மனம் இறங்கி வந்தார்.

Jyothika Suriya Sivakumar

திருமணம்: பல காத்திருப்புக்கு பிறகு 2006ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். திருமணமாகி குழந்தைகள் பிறந்ததால் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக சினிமாவிலிருந்து ஒரு பிரேக் எடுத்தார் நடிகை ஜோதிகா. சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

ரீ என்ட்ரி: அதனைத் தொடர்ந்து 36 வயதினிலே படத்தில் அவர் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதாலும்; சூர்யா மற்றும் குடும்பத்தினரின் சப்போர்ட் இருந்ததாலும் தொடர்ந்து நடித்துவருகிறார் ஜோ. தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர் தற்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் இப்போது அவர் டப்பா கார்ட்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அது விரைவில் வெளியாகவிருக்கிறது.அதனையொட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டிவருகிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் பேச்சு: அந்தவகையில் ஒரு ப்ரோமோஷனில் பேசிய ஜோதிகா, "சூர்யாவை திருமணம் செய்த பிறகு நான் அதிர்ஷ்டசாலி என்று பலரும் சொல்கிறார்கள். சூர்யா ரொம்ப நல்லவர் அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள். அப்போ என்னை திருமணம் செய்துகொண்டதால் சூர்யா அதிர்ஷ்டசாலி இல்லையா?.. நான் சூர்யாவை பற்றி ஏதாவது பேசினால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுவே சூர்யா என்னை பற்றி பேசினார் என்றால் என்ன சூர்யா எப்போதும் மனைவியை பற்றி பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

பாலின பாகுபாடு: திருமணத்துக்கு பிறகுதான் இந்த பாலின பாகுபாட்டினை நான் அதிகம் சந்தித்தேன்" என்றார். அவரது பேச்சு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஏற்கனவே ஜோதிகாவுக்கும் சூர்யா குடும்பத்துக்கும் பிரச்னை என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இவர் பேசுவதை பார்த்தால் மேற்கொண்டு புது பஞ்சாயத்து எதுவும் அவர்களுக்குள் உருவாகிவிடுமோ என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X