எவ்வளவு பிஸியா இருந்தாலும் அந்த ரூலை ஃபாலோ செய்வோம்.. சூர்யா வீட்டு சீக்ரெட்டை சொன்ன ஜோதிகா
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யாவின் வீட்டிலிருக்கும் ரூல் குறித்து ஜோதிகா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.
ஜோதிகா பேட்டி: இந்நிலையில் சூர்யா வீட்டில் இருக்கும் ரூல் குறித்து ஜோதிகா பேசியிருக்கும் வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "வீட்டில் பெண்கள் ஒரு செட், ஆண்கள் ஒரு செட். அனைத்து பெண்களும் ஒரு டீமாக இருப்போம். சூர்யா இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பார். கார்த்தியும், சூர்யாவும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பார்கள். சிவக்குமாரோ ஸ்பீச் கொடுப்பதில் பிஸி.
ரூல் உண்டு: யார் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வீட்டில் ஒரு ரூல் இருக்கிறது. மதிய சாப்பாடும், இரவு சாப்பாடும் எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதனால் அந்த இரண்டு வேளையும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே இடத்தில் ஆஜராகி இருப்போம். மகள் தியா அப்பா செல்லம்தான். மகன் தேவ் எங்கள் இரண்டு பேரிடமும் பாசமாக இருப்பான்" என்றார்.


Click it and Unblock the Notifications











