தாய் கிழவி படம் பார்த்துட்டு ஜோதிகா கொடுத்த விமர்சனம்.. என்னங்க இப்படி சொல்லியிருக்காங்க!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் திரைப்படம் தாய் கிழவி. கடந்த 20ஆம் தேதியே ரிலீஸாகவிருந்த படம் சில காரணங்களால் 27ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. சூழல் இப்படி இருக்க நேற்று திரை பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கிறது.
எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் தாய் கிழவி. இதில் ராதிகா லீடு ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் பால சரவணன், அருள்தாஸ், சிங்கம்புலி, ரேச்சல் என பலர் நடித்திருக்கிறார். ஆண்பாவம் பொல்லாதது படத்துக்கு கதை எழுதிய சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதுதான் அவர் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அறிவிப்பு வந்தபோதே நிலவியது.
படத்தின் ப்ரீமியர் ஷோ: அந்த எதிர்பார்ப்பை படத்திலிருந்து வெளியான ட்ரெய்லரும், க்ளிம்ப்ஸும் மேற்கொண்டு எகிற வைத்தன. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ப்ரீமியர் ஷோ திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அதில் சூர்யா, ஜோதிகா, சரத்குமார், பிரபு, அதர்வா, ஷாலினி என பலர் கலந்துகொண்டார்கள். படத்தை பார்த்துவிட்டு ராதிகா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் என ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டி தள்ளிவிட்டார்கள்.

ஜோதிகாவின் விமர்சனம்: இந்நிலையில் படம் பற்றி ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அவர் தனது பதிவில், "பெண்மையின் சக்தியை இவ்வளவு அழகாக காட்டப்பட்டிருப்பதை பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மனதை வருடும், நல்ல உணர்வை தரும் படமாக மட்டுமின்றி முன்னேற்றம் தரக்கூடிய சினிமாவாகவும் தாய் கிழவி திகழ்கிறது.
உங்கள் முதல் படமா இது?: இயக்குநர் சிவக்குமார் முருகேசன். இது உண்மையிலேயே உங்களின் முதல் படமா?. நம் சமூகத்துக்கு மிகவும் முக்கியமான ஒரு செய்தியை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதை மரியாதையான நகைச்சுவையுடன் இயல்பாக சொல்லியிருப்பது அருமை. ஒரு பெண்ணாக உங்கள் கதையை பார்த்தபோது நான் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனையே உங்களது குணநலனை காட்டுகிறது.
சிவகார்த்திகேயன் பற்றி: ராதிகா போன்ற சக்தி வாய்ந்த ஆளுமை நிறைந்த நடிகைக்கு உண்மையான, தகுதியான இடத்தை கொடுத்ததற்கு நன்றி சிவகார்த்திகேயன். வயது என்ற எல்லையை தாண்டி ஒரு பெண்ணையும் அவரது திறமையையும் மையமாக வைத்து இந்தப் படத்தை தயாரித்ததற்காக அனைத்து நடிகைகளின் சார்பிலும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு ஸ்டார் வேல்யூவை பயன்படுத்தி பெண்களுக்கு தேவையான இந்தப் படத்தை கொடுத்ததற்கு நன்றி.
ராதிகா பற்றி: ராதிகா சரத்குமார் மேடம் நீங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறீர்கள். ரொம்பவே ஊக்கம் கொடுப்பவர் நீங்கள். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் ரீதியாக நீங்கள் கொடுத்திருக்கும் உழைப்பை நினைத்து பார்க்கவே முடியவில்லை. தாய் கிழவி ஒரு சக்தி வாய்ந்த, புத்திசாலித்தனமான கதாபாத்திரம் மட்டுமில்லை. ரொம்ப க்யூட்டாகவும் இருந்தார். ஆஃப் கேமராவில் நாங்கள் அறிந்த ராதிகாவை பிரதிபலிப்பது போன்றுதான் இந்தக் கதாபாத்திரம் இருந்தது. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், குரல் மாற்றம், சிரிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்தும் உங்களை தனித்துவமான நடிகையாக நிரூபிக்கின்றன. இந்தப் படம் பெண்களை மையப்படுத்திய படம் மட்டுமில்லை சினிமாவை ஒரு படி முன்னேற்றும் படமும்கூட. தாய் கிழவி டீம் நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











