ரஜினிக்கு அடுத்து சூர்யாவுடன் வம்பு.. தரமான பதிலடி கொடுத்த ஜோதிகா.. கூலான பல்பு.. விஜய் கன்ட்ரோல் செய்வாரா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறார். கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, மனைவி சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனு, திரிஷாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவது என ஏகப்பட்ட பிரச்னைகள் அவரை சுற்றி இருக்கின்றன. இதெல்லாம் போதாது என்று அவரது ரசிகர்கள் திரைத்துறையில் இருக்கும் மற்ற நடிகர்களை தொடர்ந்து மட்டமாக பேசிவருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவை பற்றி அப்படி ஒருவர் ஜோதிகாவிடம் பேச; ஜோ கூலாக பல்பு கொடுத்திருக்கிறார்.

கோலிவுட்டில் பெரிய ஹீரோக்களில் ஒருவரான விஜய் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் பிரவேசம் செய்தார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து திமுகவை காட்டமாக எதிர்த்துவரும் அவர்; பாஜகவை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த கொள்கை எதிரியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையெல்லாம் தவெக நடத்தியிருக்கிறது. இருப்பினும் கூட்டணி அமையவில்லை. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் கட்சியின் தொண்டர்கள்.

Jyothika Reacts to Vijay vs Suriya Comparison Viral Reply Sparks Debate
Photo Credit:

ஏகப்பட்ட பிரச்னைகள்: ஏற்கனவே விஜய்யை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. முதலில் கரூர் துயர சம்பவம் நடந்தது. அதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடந்துவருகிறது. விஜய்யும் ஆஜராகிவருகிறார். அதனையடுத்து அவரது மனைவி சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் திரிஷாவுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்தார் விஜய். அது மேற்கொண்டு பூகம்பத்தை கிளப்பியது.

Also Read
திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடி
திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடி

ரஜினியை வம்பிழுத்த ஆதவ்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது, 'ரஜினி அரசியலுக்கு வர விரும்பினார். ஆனால் அவரை திமுக மிரட்டியது. அதனால் அவர் பின்வாங்கிவிட்டார். மன வலிமை இல்லாமல் போய்விட்டது' என்று கொளுத்திப்போட்டார். அதை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். மேலும் ரஜினிகாந்த்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, 'காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' என எச்சரித்திருந்தார்.

Jyothika Reacts to Vijay vs Suriya Comparison Viral Reply Sparks Debate
Photo Credit:

எதற்காக இவ்வளவு வம்புகள்?: தவெகவினரை பொறுத்தவரை தங்களை சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் வம்பிழுத்துவருகிறார்கள். ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்ட பிறகும், ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்ட பிறகும்கூட; விர்ச்சுவல் வாரியர்ஸ் தொடர்ந்து ரஜினியை தரக்குறைவாக பேசினார்கள். அதேபோல்தான் விவாகரத்து மனு வெளியே வந்த சமயத்தில் சங்கீதாவையும் தரக்குறைவாக பேசினார்கள். அத்தனைக்கும் விஜய் தனது அமைதியையே பதிலாக கொடுத்து அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார் என்பதுதான் உண்மை. ஏன் அவர்கள் இவ்வளவு வம்பு வளர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

சூர்யா பற்றி கிண்டல்; ஜோதிகா பதிலடி: இப்படியே சுற்றி இருப்பவர்களை வம்பிழுத்துக்கொண்டிருந்தால் தேர்தலில் கடுமையான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தாலும் தொடர்ந்து அதையேதான் செய்கிறார்கள். ரஜினி பிரச்னை கொஞ்சம் ஓய்ந்திருக்கும் சூழலில்; இன்ஸ்டாகிராமில் ஜோதிகாவின் பதிவு ஒன்றில் சென்று சூர்யாவை விட விஜய் சிறந்த நடிகர் என்று கமெண்ட் செய்திருக்கிறார் ஒரு ரசிகர். அதற்கு ஜோதிகாவோ, சிரிக்கும் ஸ்மைலியை போட்டு பதிலடி கொடுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகியிருக்கிறது. இதை பார்த்த மற்றவர்களோ எல்லோரிடமும் பல்பு வாங்குவதே இந்த விஜய் ரசிகர்களுக்கு வேலையாய் போய்விட்டது என்று கிண்டல் செய்துவருகிறார்கள். மேலும் இப்படி தொடர்ந்து செய்பவர்களை விஜய்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X