சினிமாவில் வாழ்வு கொடுத்தவர் படத்திலேயே நடிக்க மறுத்த ஜோதிகா?
Recommended Video

சென்னை: எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஜே. சூர்யாவை வைத்து தமிழ்வாணன் இயக்கும் படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் கோலிவுட் வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படம் மூலம் தான் ஜோதிகா கோலிவுட் வந்தார்.
மேலும் அதே எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படம் ஜோதிகாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்க மறுத்துள்ளார் என்றால் நிச்சயம் ஏதாவது வெயிட்டான காரணம் இருக்கும்.

உயர்ந்த மனிதன் படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் தமிழ்வாணன் ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தை இயக்கியவர்.
தன் படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதன் மூலம் தனது கனவு நிறைவேறியுள்ளதாக தமிழ்வாணன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











