தமிழ் சினிமாவில் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. ஓபனாக சொன்ன ஜோதிகா
சென்னை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா; தன்னுடைய பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் தனது கவனத்தை குறைத்து பாலிவுட்டில் அதிகம் செலுத்திவருகிறார். அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் சிஸ்டம் என்ற படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. ஓரளவுக்கு வரவேற்பையே அது பெற்றது. இந்நிலையில் தமிழில் அதிகம் நடிக்காததற்கான காரணத்தை சமீபாத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார் ஜோ.
ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாதான் பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஹீரோக்களுடன் டூயட் மட்டும் பாடாமல் சந்திரமுகி, மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ரோல்களில் தனது இளம் வயதிலேயே நடித்து அசத்தினார். கிளாமர், ஹோம்லி என கலக்கிவந்த அவர் சூர்யாவை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்போது காதலித்தார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சிவகுமார் ஓகே சொன்னதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

மீண்டும் வந்த ஜோதிகா: சில வருடங்கள் திருமணத்துக்கு பின்பு பிரேக் எடுத்திருந்த அவர்; பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அந்தவகையில் தமிழில் 36 வயதினிலே, உடன்பிறப்பே, ராட்சசி, பொன்மகள் வந்தாள் என வரிசையாக ஹீரோயின் சென்ட்ரிக் ரோல்களில் நடித்தார். அந்தப் படங்களும் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸையும் பெறத்தான் செய்தன. இதன் காரணமாக கண்டிப்பாக மீண்டும் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
யூ டர்ன் அடித்த ஜோதிகா: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது கவனம் இப்போது அதிகம்ஹிந்தியில்தான் இருக்கிறது. அந்த மொழி படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை அவருக்கு கொடுக்காவிட்டாலும்; பாலிவுட்டை விடாமல் பிடித்துவருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் சிஸ்டம் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். அவருடன் சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. சூழல் இப்படி இருக்க தமிழில் அதிகம் நடிக்காததற்கு காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார் அவர்.
ஜோவின் பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், "நான் தமிழில் அரசு ஆசிரியர், வழக்கறிஞர், கலெக்டர் என்று அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் செய்துவிட்டேன்.இல்லத்தரசியாகவும் பலவிதமான கேரக்டர்களை செய்துவிட்டேன். திரும்ப திரும்ப்ப ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக வெயிட் செய்துகொண்டிருக்கிறேன். இரண்டு வருடங்கள் இல்லை இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நல்ல கேரக்டருக்காக காத்திருப்பேன்" என்றார்.
ஜோதிகாவின் கோரிக்கை: முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் ஜோதிகா. அப்போது அவரிடம் மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'என்னையும் சூர்யாவையும் சேர்த்து வைத்து யாராவது ஒரு இயக்குநர் ரொமான்ட்டிக்கான கதை சொன்னால் நடிப்பேன். ஆனால் அப்படிப்பட்ட இயக்குநர்கள் தமிழில் இப்போது ரொம்பவே குறைந்துபோய்விட்டார்கள்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
