twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ராதிகாவின் அந்த படத்தை போன்றதா ஜோதிகாவின் உடன்பிறப்பே? தீயாய் பரவும் தகவல்!

    |

    சென்னை: நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவாகி வரும் உடன்பிறப்பே படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியில் 1998ஆம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

    மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா... டைரக்டர் யார் தெரியுமா மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா... டைரக்டர் யார் தெரியுமா

    வாலி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஜோதிகா. அதன்பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.

    அஜித் விஜய்யுடன் ஜோதிகா படங்கள்

    அஜித் விஜய்யுடன் ஜோதிகா படங்கள்

    நடிகை ஜோதிகா அஜித்துடன் முகவரி, பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய படங்களில் நடித்தார். இதில் முகவரி மற்றும் பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்கள் பெரும் ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யுடன் குஷி, திருமலை ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சூர்யாவுடன் அதிகமாக 7 படங்கள்

    சூர்யாவுடன் அதிகமாக 7 படங்கள்

    நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார். உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார். இதேபோல் மாதவன், விக்ரம், சிம்பு, அர்ஜூன் ஆகியோருடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

    சூர்யாவுடன் காதல் திருமணம்

    சூர்யாவுடன் காதல் திருமணம்

    அவரது நடிப்பில் வெளியான மொழி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவுடன் படங்களில் சேர்ந்து நடிக்கும் போது அவருடன் நடிகை ஜோதிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் ஜோதிகா.

    திருமணத்திற் பிறகு நடிக்கும் ஜோதிகா

    திருமணத்திற் பிறகு நடிக்கும் ஜோதிகா

    சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார் ஜோதிகா.

    ஜோதிகாவின் 50வது படம்

    ஜோதிகாவின் 50வது படம்

    அந்த வகையில் மகளிர் மட்டும், நாச்சியார். செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பெரும்பாலும் அவரை மைய்யப்படுத்தியே வெளி வந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது 50வது படமாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    கத்துக்குட்டி பட இயக்குநர் சரவணன்

    கத்துக்குட்டி பட இயக்குநர் சரவணன்

    கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாதங்கி, வைரவன், சற்குணம் ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இதில் மாதங்கியாக ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

    அண்ணன் தங்கை உறவில் விரிசல்

    அண்ணன் தங்கை உறவில் விரிசல்

    மாதங்கியும், வைரவனும் உடன்பிறந்தவர்கள். மாதங்கியின் கணவர் சற்குணத்தால் அண்ணன் தங்கை உறவில் விரிசல் வருகிறது. அண்ணனா, கணவனா என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கதாப்பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடன்பிறப்பே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

    கிழக்கு சீமையிலே படத்தை போல்

    கிழக்கு சீமையிலே படத்தை போல்

    இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் கதையை அறிந்த ரசிகர்கள் 1993 ஆம் ஆண்டு ராதிகா நடிப்பில் வெளியான கிழக்கு சீமையிலே படத்தை போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். பாரதிராஜா இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா, விஜயகுமார், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

    Recommended Video

    Thala car எங்க அப்பாதான் tune பண்ணி குடுத்தார் | Nivedhithaa Chat | Filmibeat Tamil
    பெரும் ஹிட்டான கிழக்கு சீமையிலே

    பெரும் ஹிட்டான கிழக்கு சீமையிலே

    இதில் விஜயகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். நெப்போலியன் ராதிகாவின் கணவராக நடித்திருப்பார். நெப்போலியனுக்கும் விஜயகுமாருக்கும் இடையே மோதல் வெடிக்கும் நிலையில் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ராதிகா கடைசியில் கணவரிடமிருந்து தனது அண்ணனை காப்பாற்ற தனது உயிரையே விடுவார். ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jyothika's 50th movie Udanpirappe Story revealed. Saravan directing Jyothika's 50th film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X