ஜோதிகா வெறித்தனமான ஒர்க் அவுட்.. 47 வயதில் எல்லோரையும் நாக் அவுட் செய்றாங்க ப்பா.. வேற லெவல்

சென்னை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா ஹிந்தி திரையுலகத்தில் தனது முழு கவனத்தையும் இப்போது திருப்பியிருக்கிறார். தான் மட்டுமின்றி தனது கணவரையும் அந்தத் துறையில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அடிக்கடி ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர்; அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்திருக்கும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மும்பையை சேர்ந்த ஜோதிகா வாலி படத்தில் அறிமுகமானார். அதில் சிறு வேடத்தில் மட்டுமே தோன்றியிருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்போதிருந்தே சூர்யாவுக்கும், ஜோவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல் வந்தாலும் தொடர்ந்து கரியரில் கவனம் செலுத்தி முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். கிளாமர் ரோல், ஹோம்லி ரோல் என எதுவாக இருந்தாலும் அசத்தலான ஃபெர்ஃபார்மன்ஸை கொடுத்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

Jyothika s Intense Workout Video at 47 Goes Viral Fans Stunned by Her Fitness
Photo Credit:

சூர்யாவுடன் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க இவர்களது காதலுக்கு முதலில் சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லை. நீண்ட வருடங்கள் இந்த ஜோடி காத்திருந்து வீட்டு சம்மதம் கிடைத்ததும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றதால்; நடிப்புக்கு பை சொல்லிவிட்டு தன் பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்கும் தாயாக மாறினார். பிள்ளைகள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ளும் வயது வந்தவுடன் ஜோ மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

சூப்பர் முடிவு: இரண்டாவது இன்னிங்ஸில் சும்மா எல்லா கதைகளையும் ஒத்துக்கொள்வதில்லை. தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அப்படி அவர் நடித்த உடன்பிறப்பே, பொன்மகள் வந்தாள், ராட்சசி உள்ளிட்ட படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. முதல் இன்னிங்ஸிலேயே ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் அவர் நடித்திருக்கிறார்தான். ஆனாலும் அவர் தனக்கு அப்படி ஒரு ரோலே தென்னிந்திய சினிமாக்களில் கிடைப்பதில்லை என சொல்லி பரபரப்பை கிளப்பினார்.

Also Read
எல்லா நடிகைகளையும்.. நயன்தாராவும், திரிஷாவும் ஆர்யாவை காலி செஞ்சுட்டாங்களே.. புட்டு புட்டு வைத்த ஹீரோயின்ஸ்
எல்லா நடிகைகளையும்.. நயன்தாராவும், திரிஷாவும் ஆர்யாவை காலி செஞ்சுட்டாங்களே.. புட்டு புட்டு வைத்த ஹீரோயின்ஸ்

ஓபனாக பேசிய ஜோதிகா: அதுமட்டுமின்றி உடன்பிறப்பே பட சமயத்தின்போது கோயில்களையும், மருத்துவமனைகளையும் ஒப்பிட்டு பேசியது ஹிந்துத்துவாக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரிய போராட்டத்துக்கெல்லாம் அடி போட்டார்கள். ஆனால் அந்த விஷயத்தில் பெரும்பாலானோர் ஜோவுக்கு சப்போர்ட் செய்தார்கள். முக்கியமாக நடிகரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா தனது முழு ஆதரவையும் மனைவிக்கு கொடுத்தார். அதை பார்த்து பலரும், கணவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

நாக் அவுட் செய்யும் ஜோதிகா: ஜோவுக்கு இப்போது 47 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவரது அழகு அப்படியே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் தவறாமல் ஜிம்முக்கு செல்வதுதான். தன்னுடைய கணவர் மாதிரியே ஜிம்மை ரொம்பவே விரும்புகிறார் அவர். அங்கே செல்வதோடு மட்டுமின்றி வெறித்தனமாக தான் செய்யும் ஒர்க் அவுட் தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்வார். அந்தவகையில் இப்போதும் அவர் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் ஏகப்பட்ட கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் 47 வயதிலும் இப்படி நாக் அவுட் செய்றாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து வாழ்த்திவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X