உடன்பிறப்பே...ஜோதிகாவின் ரோல் இது தானா... அசத்தலாக வெளியான தகவல்
சென்னை : ஜோதிகா தற்போது, கத்துக்குட்டி பட டைரக்டர் இரா சரவணன் இயக்கும் உடன்பிறப்பே படத்தில் நடித்து வருகிறார். இது ஜோதிகாவின் 50 வது படமாகும். பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து ஜோதிகாவின் இந்த படமும் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது.

கிராமத்து சென்டிமென்ட் கதையாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரிக்கிறது. ஆகஸ்ட் 19 ம் தேதி இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி, வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஜோதிகாவின் ரோல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் தைரியமான, அதே சமயம் பாசக்கார தஞ்சாவூர் பெண்ணாக நடித்துள்ளாராம் ஜோதிகா. இந்த படத்தில் ஜோதிகாவுடன் சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, நிவேதிதா சதீஷ், கலையரசன், சித்து ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
அண்ணன் - தங்கையான வைரவன், மாதங்கி இடையேயான பாசப்பிணைப்பை சொல்வது தான் படத்தின் கதையாம். இதில் வைரவனாக சமுத்திரக்கனியும், மாதங்கியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சுகுமாறன் ரோலில், சசிக்குமார் நடிக்கிறார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து கணவர் சசிக்குமாரையும், அண்ணன் சமுத்திரக்கனியையும் ஜோதிகா எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் படத்தின் மொத்த கதை.
இந்த படத்தின் கதையை இரா.சரவணன் சொன்ன போது ஜோதிகாவிற்கு மிகவும்க பிடித்து விட்டதாம். இது தனது 50 வது படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டாராம் ஜோதிகா. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைத்துள்ளார்.
உடன்பிறப்பே படத்துடன் சேர்த்து மொத்தம் 4 படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய அமேசான் பிரைம் வீடியோவுடன், 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் முதல் படமாக ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் செப்டம்பரில் ரிலீசாக உள்ளது. அக்டோபரில் உடன்பிறப்பே, நவம்பரில் ஜெய் பீம், டிசம்பரில் ஓ மை டாக் ஆகிய படங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications











