பாலிவுட்டுக்கு சென்று ஏமாந்த ஜோதிகா?.. ச்ச இப்படி ஆகிப்போச்சே.. ஜிம்மில் தில்லாலங்கடியா?

சென்னை: நடிகை ஜோதிகா தனது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்திவருகிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்ததாக சிஸ்டம் என்ற படத்தில் நடித்துவருகிறார். போகிற போக்கை பார்த்தால் அவர் தமிழுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போட்டுவிடுவார் என்றே கருதப்படுகிறது. சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் தனது உடல்நலத்திலும் கவனத்தை செலுத்துகிறார். ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவர் அடிக்கடி பகிர்வது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். இதனால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு உடன் பிறப்பே, ராட்சசி, பொன்மகள் வந்தாள், காற்றின் மொழி, செக்க சிவந்த வானம் என வரிசையாக தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு கோலிவுட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் முழுமையான திருப்தியை கொடுக்கவில்லை. இதன் காரணமாக பாலிவுட்டுக்கு சென்றார்.

Jyothika s Workout Video Sparks Debate Trainers Question Her Fitness Routine
Photo Credit:

சூர்யாவை அழைத்து சென்ற ஜோ: பாலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்து வரும் அவர்; தான் மட்டுமின்றி தனது கணவர் சூர்யாவும் ஹிந்தி திரைத்துறையில் கவனம் செலுத்தும்படி பார்த்துக்கொண்டார். இதன் காரணமாக அவர்கள் மும்பைக்கு சென்று செட்டிலும் ஆகிவிட்டார்கள். சினிமாவுக்காக மட்டுமில்லாமல் ஜோதிகாவுக்காகவும் அங்கே சென்று செட்டில் ஆகியிருப்பதாக கூறினார் சூர்யா. அதேபோல் சிவகுமாருடன் பிரச்னை அதனால்தான் இந்த மும்பை வாசம் என்ற தகவலையும் அந்த ஜோடி திட்டவட்டமாக மறுத்தது.

அடுத்த படங்கள்: சூர்யா இப்போது கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஸ்வநாத்&சன்ஸ், சூர்யா 47 படங்களில் நடிக்கிறார். ஜோதிகாவை பொறுத்தவரை கடந்த வருடத்தில் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். அது சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக சிஸ்டம் என்ற படத்தில் நடிக்கிறார். இது அமேசான் ப்ரைமால் தயாரிக்கப்படுகிறது. என்னதான் அவர் ஹிந்தியில் நடித்தாலும் எப்போது தமிழுக்கு வருவார் என்ற ஆவலும் ரசிகர்களிடம் இருக்கிறது.

Also Read
ஹீரோயின் சினிமாவிலிருந்து விலகலா?.. அவருடன் திருமணமா?.. மௌனம் கலைத்த திரிஷா.. ஓபனா சொல்லிட்டாங்களே
ஹீரோயின் சினிமாவிலிருந்து விலகலா?.. அவருடன் திருமணமா?.. மௌனம் கலைத்த திரிஷா.. ஓபனா சொல்லிட்டாங்களே

ஜிம்மில் ஒர்க் அவுட்: அவரும் தன்னையும், சூர்யாவையும் வைத்து ஒரு காதல் படத்தை யாராவது எடுத்தால் நடிக்க தயார் என்றே சொல்லியிருக்கிறார். இப்படி நடிப்பில் செம பிஸியாக இருந்தாலும் ஜோதிகா தனது ஃபிட்னெஸில் அதீத கவனத்துடன் இருப்பவர். அடிக்கடி ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்வார். தொடைகள், காலின் பின்பகுதிகளுக்கு வலு கொடுக்கும் விதமாக தம்பிளை மார் அளவு பிடித்துக்கொண்டு ஸ்குவாட்ஸ் போடும் Goble Squat, தொடையின் முன் பகுதி, பின் பகுதி தசைகள், கெண்டை கால் தசைகளுக்கு உதவக்கூடிய சுவற்றில் சாய்ந்து நாற்காலி ஏதுமின்றி அமரும் வால் சிட் போன்ற உடற்பயிற்சிகளை செய்வார்.

ஏமாற்றப்படும் ஜோதிகா?: இதுபோன்ற உடற்பயிற்சிகள் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதாக தெரிவித்திருக்கிறார். அவர் பகிர்ந்த வீடியோவில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் உதவியுடன் மாடி படி ஏறும்படியான ஒர்க் அவுட்டும் இருந்தது. அதை பார்த்த தமிழ்நாட்டை சேர்ந்த சில ஜிம் ட்ரெய்னர்கள், "நாங்கள் பெர்சனல் அட்டாக் செய்யவில்லை. சரி, தப்பு என்று சொல்ல வரவில்லை.

அவரது ட்ரெய்னர் ஏதோ ஒரு ஒர்க் அவுட்டை சொல்லி கொடுத்திருக்கிறார். அவரும் இணையத்தை பார்த்து இதை செய்திருக்கலாம். இதில் ஒரு பயனும் இல்லை. இப்படி செய்தால் எல்லோரும் உங்களை திரும்பி பார்ப்பார்கள். படியில் இப்படி குதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதேபோல் ஒரு காலால் நின்று கொண்டு இன்னொரு காலை அசைக்கிறர். அதை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இவர் ட்ரெய்னரை மாற்ற வேண்டும். அவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பது புரியவே இல்லை" என்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X