பல சூப்பர் ஸ்டார் கூட நடிச்சிருக்கேன்.. ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ.. ஜோதிகாவின் விளக்கத்தை பாருங்க!

சென்னை: முன்னணி இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களை முதன்மை படுத்திய கதைகளை கொடுப்பதில்லை என சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஜோதிகா தற்போது பல சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ளேன் ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ என மம்மூட்டியை பாராட்டி உள்ளார்.

ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ஜோதிகா சீனியர் நடிகையான நிலையில், மூத்த நடிகர்களுடன் இணைந்து முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Jyothika says Mammootty is the real hero among all South Superstars

இந்நிலையில், அவரது பேச்சும் எண்ணமும் ரொம்பவே மெச்சூராகி உள்ள நிலையில், மம்மூட்டி ஏன் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார் என்றும் அவரை ஏன் ரியல் ஹீரோ என்கிறேன் என்பதற்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நூறு பேரு அடிச்சா ஹீரோவா?: மம்மூட்டி சாருடன் காதல் தி கோர் படத்தில் நடிக்கும் போது நீங்க போய் எப்படி சார் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவிச்சீங்க என கேட்டேன். அதற்கு அவர், நூறு பேரு அடிச்சா அவன் ஹீரோவா.. வித்தியாசமான கதையில் நடிக்கணும், நமக்கே சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் அவன் தான் நல்ல நடிகன், ஹீரோ என்று பதில் அளித்தார். அதை கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன் என பேசியுள்ளார்.

மம்மூட்டி தான் ரியல் ஹீரோ: நான் பல சூப்பர்ஸ்டார்களுடன் தென்னிந்திய படங்களில் நடித்துள்ளேன். ஆனால், மம்மூட்டி தான் என்னை பொறுத்தவரையில் ரியல் ஹீரோ. தனது இமேஜுக்கும் ரசிகர் பட்டாளத்துக்கும் அவர் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் கமர்ஷியல் ஹீரோவாகவுமே இருந்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி நடிப்பையும் சினிமாவையும் அவர் நேசிக்கும் விதம் ரொம்பவே பிடித்துள்ளது என ஜோதிகா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

சித்தார்த் பாராட்டு: ஜோதிகா, பாபி தியோல், சான்யா மல்கோத்ரா, கரீனா கபூர் மற்றும் சித்தார்த் பங்கேற்ற ரவுண்ட் டேபிள் கலந்துரையாடலில் ஜோதிகாவின் பேச்சைக் கேட்ட சித்தார்த் கடந்த சில ஆண்டுகளாக நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர் என மம்மூட்டி தேர்வு செய்யும் படங்களும் அதன் கதைகளுமே வித்தியாசமாகவும் வியக்கவும் வைக்கிறது என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X