தனியா வாழ்றாங்களா?.. சூர்யா பற்றி ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா?.. அது மட்டும்தான் பிரச்சனையே!
சென்னை: நடிகை ஜோதிகா மும்பையிலும் நடிகர் சூர்யா சென்னையிலும் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஜோதிகா மற்றும் சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் நடிகர் சூர்யா பற்றியும் கங்குவா திரைப்படத்தை பற்றியும் ஜோதிகா பேசியிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தேவ் மற்றும் தியா என இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
சூர்யா வீட்டில் பிரச்சனை?: நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் சென்னையில் அப்பா சிவகுமார் வீட்டில் தான் வசித்து வருகிறார் என்றும் நடிகை ஜோதிகா மட்டுமே மும்பையில் தனது மகளுடன் வசித்து வருவதாக சில தேவையற்ற வதந்திகள் திடீரென கிளம்பின. இந்நிலையில், அதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோதிகா.
ஜோதிகா பேட்டி: ஏற்கனவே ஜோதிகா அளித்த பேட்டியில் மாமனார் சிவகுமாருடன் சண்டை ஏற்பட்ட நிலையில்தான் மும்பைக்கு சென்று விட்டதாக கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். தனது பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் விதமாக மும்பைக்கு சென்றிருப்பதாகவும் மீண்டும் சென்னை வந்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார். மும்பைக்கு சென்ற ஜோதிகா ஆங்கிலத்தில் சில படங்களில் நடித்து வெற்றியும் கண்டுள்ளார்.
200 சதவீதம் பர்ஃபெக்ட்: தனது கணவர் சூர்யா பற்றி சொல்லும் போது குடும்பத்திலும் சினிமாவிலும் அவர் 200 சதவீதம் சிறப்பாக செயல்படக்கூடியவர். கங்குவா திரைப்படம் பல்வேறு மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த மேக்னம் ஓபஸ் படத்தை திரையரங்கில் ரசிகர்கள் விரைவில் காண உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

அது மட்டும் தான் பிடிக்கல: கங்குவா படத்திற்காக சூர்யா பல நாட்களாக அதே ஹேர் கட்டுடன் உள்ளார். அது மட்டும் தான் கொஞ்சம் பிடிக்கவில்லை. விரைவில் அவருக்கு ஹேர் கட் பண்ணி விட வேண்டும் என ஜாலியாக பேசியுள்ளார் ஜோதிகா. சினிமா படப்பிடிப்புக்காக இருவரும் வெவ்வேறு இடங்களில் பிஸியாக உள்ள நிலையில், இருவர் குறித்தும் தேவையற்ற வசதிகளை சமூக வலைத்தளங்களில் சிலர் வேண்டுமென்றே கொளுத்திப் போடுவது தவறான செயல் என அந்தப் பேட்டியை பார்த்த சூர்யா ரசிகர்கள் அதற்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
கங்குவா மிரட்டும்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் இறுதி கட்ட சிஜி பணிகளில் உள்ளதாகவும் விரைவில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா திரைப்படம் நிச்சயம் பாகுபலி ரேஞ்சுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று படக்குழுவினர் முழு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கொடுக்காத சூர்யா இந்த ஒரே படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











