47 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் ஜோதிகா.. யப்பா வேற லெவல்.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா
சென்னை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா; தன்னுடைய பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் தனது கவனத்தை குறைத்து பாலிவுட்டில் அதிகம் செலுத்திவருகிறார். அதன் காரணமாக சூர்யா மற்றும் குழந்தைகளோடு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் ஜோ; தனது காஸ்ட்யூம்கள் மற்றும் லுக்குகளால் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துவருகிறார்.
நடிகை ஜோதிகா ஹிந்தியில் திரையுலக பயணத்தை ஆரம்பித்தாலும் தமிழ் சினிமாதான் பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஹீரோக்களுடன் டூயட் மட்டும் பாடாமல் சந்திரமுகி, மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ரோல்களில் நடித்து அசத்தினார். கிளாமர், ஹோம்லி என கலக்கிவந்த அவர் சூர்யாவை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்போது காதலித்தார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சிவகுமார் ஓகே சொன்னதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா: சில வருடங்கள் திருமணத்துக்கு பின்பு பிரேக் எடுத்திருந்த அவர்; மீண்டும் நடிக்க வந்தார். முதல் இன்னிங்ஸ் போல் இல்லாமல் இந்த முறை முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே நடித்தார். அப்படி அவர் தமிழில் 36 வயதினிலே, உடன்பிறப்பே, ராட்சசி, பொன்மகள் வந்தாள் என வரிசையாக நடித்தார். அந்தப் படங்கள் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸையும் பெறத்தான் செய்தன. இதன் காரணமாக கண்டிப்பாக மீண்டும் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ட்விஸ்ட் அடித்த ஜோதிகா: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அவரது கவனம் இப்போது ஹிந்தியில்தான் இருக்கிறது. அந்த மொழி படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை அவருக்கு கொடுக்காவிட்டாலும்; பாலிவுட்டை விடாமல் பிடித்துவருகிறார். தன் கணவர் குழந்தைகளோடு மும்பையிலேயே செட்டிலும் ஆகியிருக்கிறார். தான் மட்டுமின்றி தன்னுடைய கணவர் சூர்யாவையும் பாலிவுட்டில் பெரிய நட்சத்திரம் ஆக்கிவிட வேண்டும் என்பதால்தான் அங்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது.
பிரச்னையெல்லாம் இல்லை: ஆனால் அதெல்லாம் காரணம் இல்லை; இங்கு சிவக்குமாருடன் ஜோதிகாவுக்கு சண்டை. சென்னைக்கு வந்தால்கூட வீட்டுக்கு வருவதில்லை என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். அதனை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்தார். தனக்கும் சிவக்குமாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை; அவர்தான் என்னை மீண்டும் நடிக்க சொன்னார் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இதுகுறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டதால்; மும்பையில் நடக்கும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார் ஜோ. அப்படி அவர் வரும்போது அவரது உடைகளும், லுக்குகளும் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும். அந்தவகையில் நேற்று மும்பையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் விழா நடந்தது. அதில் கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ் அணிந்துவந்து அனைத்து ஃபோட்டோகிராஃபர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, ஜோதிகாவுக்கு வயதே ஆகாதா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications














