கங்குவா நல்ல படம்.. ரெட்ரோ படமே ரிலீஸ் ஆகப்போகுது.. ஜோதிகா இன்னும் கங்குவா புராணத்தை விடவில்லை

மும்பை: நடிகை ஜோதிகா தனது குழந்தைகளின் மேற்படிப்பிற்காக சென்னையில் இருந்து வெளியேறி, மும்பையில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மேலும் பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருவதால், ஜோதிகா செம பிசியான நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் இவர் சூர்யாவின் கங்குவா படம் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யா, அவர்களின் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோர் மும்பைக்கு குடிபெயர்ந்த விட்டார்கள். சூர்யா - ஜோதிகா தம்பதிகளின் குழந்தைகள் படிப்புக்காகவும் ஜோதிகா தனது தாயாருடன் நேரம் செலவிட ஆசைப்பட்டதாலும் மும்பைக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அவர்கள் மும்பைக்கு குடிபெயர காரணமே ஜோதிகாவுக்கும் சூர்யாவின் தந்தையான சிவக்குமாருக்கும் இடையில் பிரச்னை எனக் கூறப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையிலேயே பிரச்னை எனவும், இருவரும் விவாகரத்து பெற உள்ளார்கள் என்றெல்லாம் புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.

ஆனால் இருவரும் புரளிகளுக்கு பதிலடி கொடுத்தார்கள். இருவரும் ஒன்றாக இப்போது வசித்து வருகிறார்கள். சூர்யா மும்பைக்கு ஷிஃப்ட் ஆன பின்னர் அவர் பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதிகா பாலிவுட்டில் இப்போது கலக்கி வருகிறார். தரமான கதை இருந்தால் அதை உடனே ஓகே. சொல்லிவிடுகிறார். மும்பைக்கு அவர் ஷிப்ட் ஆன பின்னர் நடித்த படம் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், இவர் நடிப்பில் வெளியான டப்பா கார்டெல் வெப் சீரிஸ் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.

Jyothika Supports Suriya And Slams Kanguva Movie Reviews

ஜோதிகா: ஜோதிகா தற்போது அளித்துள்ள பேட்டியில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தோல்வி படமாக மாறிய கங்குவா படம் குறித்து பேசியுள்ளார். அதாவது கங்குவா படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்தமாக படத்திற்கு மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்து உள்ளார்கள். ஆனாலும் சில மோசமான படங்களுக்கு கூட இந்த அளவிற்கு விமர்சனங்கள் வந்தது கிடையாது. இந்தப் படத்தை இந்த அளவுக்கு மோசமாக ஊடகங்கள் விமர்சித்தது பாதிப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது வருத்தமாக இருந்தது.

வருத்தம்: பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற பல தரம் குறைந்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான படங்கள் எல்லாம் மிகவும் கரிசனத்துடன் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது கணவர் நடித்த கங்குவா படத்தை கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்தார்கள். இது எனக்கு அநீதியாக உள்ளது." என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி விட்டார்கள். காரணம், கங்குவா படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் திரைக்கதை சரியில்லை என விமர்சித்தார்கள். அதேபோல், பின்னணி இசை மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார்கள். இது ரசிகர்களை படம் பார்க்கும் கவனத்தையும் ஆர்வத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியது. படத்தின் பின்னணி இசை தொடர்பாக ரசிகர்கள் மட்டும் இல்லாமல், இசையில் ஆஸ்கர் வாங்கிய ரசூல் பூக்குட்டியும் தெரிவித்தார்.

Jyothika Supports Suriya And Slams Kanguva Movie Reviews

விமர்சனம்: படம் தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்ததால், ஜோதிகா சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினருக்கு ஆதரவாக கருத்துக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். ஜோதிகாவின் பதிவுக்கு இணையவாசிகள் ரவுண்டு கட்டி ஜோதிகாவை விமர்சித்தார்கள். இதனால் இணையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோதிகாவின் கருத்துக்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். படம் மாபெரும் தோல்வி படமாக மாறியதால், திரையரங்கில் இருந்து வெகு சீக்கிரம் வெளியேறியது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படமே மீண்டும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ஷாக்: பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறிவிட்டதால், அவர் கமிட் ஆகும் புராஜெக்ட்கள் கவனம் பெறுகிறது. இவர் சில வாரங்களுக்கு முன்னால் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசியிருந்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது. இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. ஜோதிகாவை வளர்த்து விட்ட தென்னிந்திய சினிமாவை இப்படி மட்டம் தட்டி பேசுகிறாரே என பலரும் சங்கடத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் ஜோதிகாவின் பேச்சில் என்ன தவறு உள்ளது? அவர் உண்மையைத் தான் பேசுகிறார் எனவும் சிலர் ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.

Jyothika Supports Suriya And Slams Kanguva Movie Reviews

ஆணாதிக்கம்: தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா உலகமாக இருக்கிறது. பாலிவுட் சினிமாவோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் ரொம்பவே அதிகம். அங்கு எழுதப்படும் பெரும்பான்மையான கதைகள் ஆண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்படுகிறது. பெண் கதாபாத்திரங்கள் வெறுமனே ஆண் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மட்டும் எழுதப்படுகிறது. படத்தில் கதாநாயகிகள் கதாநாயகர்களுடன் நடனம் ஆடுவதும், காதலிப்பது, கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வதுமாக மட்டுமே இருக்கும். இப்போதும் அவை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மாற்றம்: நானுமே, நான் குறிப்பிட்டத்தைப் போல் எல்லாம் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் இதனை நான் புரிந்து கொண்டேன். நான் உணர்ந்த பின்னர் என்னை மாற்றிக் கொண்டது மட்டும் இல்லாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து கொண்டு உள்ளேன். எனக்கு இந்த புரிதல் வந்த பின்னர், நான் தேர்வு செய்யும் படங்களும் கதைகளும் என்னை இங்கு கொண்டு வந்து இப்போது நிறுத்தியுள்ளது. எனது 28 வது வயதில் இருந்தே எனக்கு இந்த புரிதல் வந்துவிட்டதால் நான் அதன் பின்னர் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். வரும் காலங்களிலும் இப்படியே நடிப்பேன் என்று கூறினார்.

Jyothika Supports Suriya And Slams Kanguva Movie Reviews

எதிர்ப்பு: ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஜோதிகா தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் அதுவும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துள்ளார். உதாரணமாக மொழி, சந்திரமுகி, 36 வயதினிலே , ராட்சசி, ஜாக்பாட் ஆகியவற்றை குறிப்பிடலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பட்டியலில் இடம் பெறும் படங்கள் அனைத்தும் ஜோதிகா குறிப்பிட்டதைப் போல அவரது 28 வயதுக்குப் பின்னர் நடித்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jyothika Supports Suriya And Slams Kanguva Movie Reviews

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X