‘சிஸ்டம்‘ படத்தில் மோசமான காட்சியில் ஜோதிகா.. சிவகுமாரின் குடும்ப மானமே போச்சு.. புலம்பும் ஃபேன்ஸ்!
சென்னை: ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம் 'சிஸ்டம்'. இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மே 22ந் தேதியான இன்று ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் கசிந்து பெரும் புயலை கிளப்பியது மட்டுமில்லாமல் பலரும் ஜோதிகாவை மோசமாக திட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் சூர்யா நடித்துள்ள "கருப்பு" திரைப்படமும், நடிகை ஜோதிகா நடித்துள்ள "சிஸ்டம்" திரைப்படமும் தான். ஒரு பக்கம் தியேட்டர்களில் "கருப்பு" திரைப்படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கருப்பு சாமி தோற்றத்தில் சூர்யா திரையில் தோன்றும் காட்சிகளில் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி கொண்டாடி வருகின்றனர். சில தியேட்டர்களில் ரசிகர்களுக்கு சாமி வந்தது போல ஆடிப்பாடிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் சூர்யாவை கருப்பசாமியாக கையெடுத்து வணங்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகாவின் சிஸ்டம்: இதே நேரத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ள "சிஸ்டம்" படத்தில் ஜோதிகா நடித்திருக்கும் ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது போன்ற காட்சியில் ஜோதிகா நடித்துள்ளார். அந்த காட்சியில் எதிரில் இருக்கும் நபர், "என்னுடைய மனைவி அம்மா வீட்டுக்கு போய்விட்டாள், அவள் திரும்ப வர இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும், அதுவரைக்கும் ஜாலியாக இருக்கலாம்" என்று கூறுகிறார். அதற்கு ஜோதிகா, "உன் வீட்டில் உன்னுடைய மனைவி ஊருக்கு போய்டா, யாரும் இல்லை, ஆனால், என் வீட்டில் என்னுடைய கணவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார் என சொல்லி சுடிதாரை சரி செய்யும் காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்த்த பல இணையவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடும்ப மானமே போச்சு: சூர்யாவை மக்கள் கருப்பசாமியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜோதிகா ஏன் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார்?, குடும்பத்தின் மானத்தை பாதிக்கும் விதமாக இப்படிப்பட்ட கதாபாத்திரம் தேவையா?, இதற்காகத்தான் சிவகுமார் அவர்களை நடிக்க விடாமல் தடுத்தாரா? என்றும், சிவகுமாரின் குடும்ப மானமே போய்விட்டது என்று கூட சிலர் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர், ஜோதிகா ஒரு நடிகை என்பதால் இதுபோன்ற ரோலில் நடித்திருக்கிறார். ஒரு காட்சியை மட்டும் வைத்து தனிப்பட்ட வாழ்க்கையோ, குடும்பத்தையோ விமர்சிப்பது தவறு என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயம் ஜோதிகாவின் இந்த கதாபாத்திரமே, அடுத்த சில வாரங்களுக்கு சமூக வலைதளங்களில் ஜோதிகா தான் பேசப்படும் பொருளாக இருக்கப்போகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
The actress once who reject Mersal Character!!!! 🙃 pic.twitter.com/mFzgBRAd03
— Voice for TVK (@Itz_MahiVFC) May 22, 2026


Click it and Unblock the Notifications