ஒரு நடிகர் 'அந்த' வார்த்தையை பேசியிருந்தால் சர்ச்சையே ஆகியிருக்காது: ஜோதிகா காட்டம்
சென்னை: நாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியது குறித்து ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாச்சியார். இந்த படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
டீஸரில் ஜோதிகா தே எனத் துவங்கும் கெட்ட வார்த்தை பேசியிருந்தார்.

சர்ச்சை
டீஸரில் வந்தது ஒரேயொரு வசனம் தான் அதுவும் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை. அந்த கெட்டவார்த்தையால் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆளாளுக்கு அது பற்றியே பேசினார்கள்.

ரசிகர்கள்
படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள். டீஸரை பார்த்துவிட்டு என் கேரக்டர் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள் என்று ஜோதிகா ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் இது குறித்து அவர் மீண்டும் பேசியுள்ளார்.

ஹீரோ
ஒரு நடிகை அந்த வார்த்தையை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது. அதுவே ஒரு நடிகர் பேசியிருந்தார் என்றால் அதை யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சூழல்
படத்தில் என் கதாபாத்திரம், அந்த சூழல் காரணமாக நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். படம் பார்த்தால் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது சரி என்பது ரசிகர்களுக்கு புரியும் என்கிறார் ஜோதிகா.

ரிலீஸ்
நாச்சியார் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீஸரால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











