»   »  மீண்டும் திகில் படத்தில் ஜோ சந்திரமுகியில் நடித்தாலும் நடித்தார், ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள். அத்தனை வாய்ப்புகளையும் அப்படியேதிருப்பி அனுப்பி வரும் ஜோதிகா ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டு வாங்கிய இரு படங்களின் பெரிய அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட்டார் ஜோதிகா.இதற்கு பர்சனல் மேட்டர் என்ற காரணத்தை ஜோதிகா தெரிவித்ததால், அடுத்த மாதம் விரைவில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும்திருமணம் என்று பட்டையைக் கிளப்பிவிட்டுவிட்டனர் இரு தெலுங்கு தயாரிப்பாளர்களும்.இதனால் வெறுத்துப் போன ஜோதிகா தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம் அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.கதை சரியில்லாததால் தான் அந்தப் படங்களில் இருந்து விலகினாராம். அதைத் தான் திருமணத்துடன் முடிச்சு போட்டு வேறுமாதிரியாக பரப்பிவிட்டுவிட்டார்களாம்.இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில்நடிக்கிறார். அப்படியே அடுத்ததாக தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.தெலுங்கில் தயாராகும் அந்தப் படம் ஏற்கனவே தமிழில் வெளி வந்து வெற்றி பெற்ற ஷாக் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில்மீனா நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜோதிகாவைத் தேர்ந்தெடுக்க காரணம் சந்திரமுகியில் அவரதுபிரமிப்பூட்டிய நடிப்பும், அவரது மிரட்டும் கண்களும் தான் காரணமாம்.கண்களை உருட்டி, நானே சந்திரமுகி என்று கடப்பாரைக் குரலில் மிரட்டிய ஜோதிகாவைப் பார்த்து பயந்து போன தயாரிப்பாளர்இவர் தான் நமது அடுத்த திகில் படத்தின் ஹீரோயின் என்று முடிவு செய்துவிட்டு நேரில் வந்து சந்தித்து அட்வான்ஸை திணித்துவிட்டுப் போய் இருக்கிறார்.கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம். வேட்டையாடு விளையாடு படத்திற்காக கொடுத்திருந்தகால்ஷீட்டை, அந்த படம் தாமதானதால் தெலுங்குப் படத்துக்கு எடுத்துக் கொடுத்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.சந்திரமுகி தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் மகா ஹிட் படமாகி விட்டது. அங்கு சிரஞ்சீவி நடித்த படங்கள்தான் இதுவரைவசூலில் சாதனை படைத்துள்ளன. அதை சந்திரமுகி தற்போது முறியடித்து விட்டதாம்.இந் நிலையில் ஜோதிகாவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. மற்ற நடிகைகள் மாதிரி இம்புட்டு கொடுத்தா தான் ஆச்சு என்றுஅடம் பிடிக்காத டைப் ஜோதிகா. டீசண்ட் சம்பளம் என்றால், கதை சரியாக இருந்தால் ஓ.கே. சொல்லிவிடுவார்.இந் நிலையில் சந்திரமுகிக்குப் பின் ஜோதிகாவின் சம்பளத்தை தயாரிப்பாளர்களே சேர்ந்து ரூ. 40 லட்சத்துக்குஉயர்த்திவிட்டார்களாம்.சும்மா வந்து ஆடுற பொண்ணுகளுக்கே அள்ளித் தர்றோம்.. இந்தப் பொண்ணு நடிப்புக்கு எவ்வளவும் தரலாம் என்கிறார்களாம்.ஆக, ஜோவின் சம்பளம் தானாகவே ரூ. 40 லட்சம் ஆகிவிட்டது.

மீண்டும் திகில் படத்தில் ஜோ சந்திரமுகியில் நடித்தாலும் நடித்தார், ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள். அத்தனை வாய்ப்புகளையும் அப்படியேதிருப்பி அனுப்பி வரும் ஜோதிகா ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டு வாங்கிய இரு படங்களின் பெரிய அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட்டார் ஜோதிகா.இதற்கு பர்சனல் மேட்டர் என்ற காரணத்தை ஜோதிகா தெரிவித்ததால், அடுத்த மாதம் விரைவில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும்திருமணம் என்று பட்டையைக் கிளப்பிவிட்டுவிட்டனர் இரு தெலுங்கு தயாரிப்பாளர்களும்.இதனால் வெறுத்துப் போன ஜோதிகா தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம் அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.கதை சரியில்லாததால் தான் அந்தப் படங்களில் இருந்து விலகினாராம். அதைத் தான் திருமணத்துடன் முடிச்சு போட்டு வேறுமாதிரியாக பரப்பிவிட்டுவிட்டார்களாம்.இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில்நடிக்கிறார். அப்படியே அடுத்ததாக தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.தெலுங்கில் தயாராகும் அந்தப் படம் ஏற்கனவே தமிழில் வெளி வந்து வெற்றி பெற்ற ஷாக் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில்மீனா நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜோதிகாவைத் தேர்ந்தெடுக்க காரணம் சந்திரமுகியில் அவரதுபிரமிப்பூட்டிய நடிப்பும், அவரது மிரட்டும் கண்களும் தான் காரணமாம்.கண்களை உருட்டி, நானே சந்திரமுகி என்று கடப்பாரைக் குரலில் மிரட்டிய ஜோதிகாவைப் பார்த்து பயந்து போன தயாரிப்பாளர்இவர் தான் நமது அடுத்த திகில் படத்தின் ஹீரோயின் என்று முடிவு செய்துவிட்டு நேரில் வந்து சந்தித்து அட்வான்ஸை திணித்துவிட்டுப் போய் இருக்கிறார்.கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம். வேட்டையாடு விளையாடு படத்திற்காக கொடுத்திருந்தகால்ஷீட்டை, அந்த படம் தாமதானதால் தெலுங்குப் படத்துக்கு எடுத்துக் கொடுத்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.சந்திரமுகி தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் மகா ஹிட் படமாகி விட்டது. அங்கு சிரஞ்சீவி நடித்த படங்கள்தான் இதுவரைவசூலில் சாதனை படைத்துள்ளன. அதை சந்திரமுகி தற்போது முறியடித்து விட்டதாம்.இந் நிலையில் ஜோதிகாவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. மற்ற நடிகைகள் மாதிரி இம்புட்டு கொடுத்தா தான் ஆச்சு என்றுஅடம் பிடிக்காத டைப் ஜோதிகா. டீசண்ட் சம்பளம் என்றால், கதை சரியாக இருந்தால் ஓ.கே. சொல்லிவிடுவார்.இந் நிலையில் சந்திரமுகிக்குப் பின் ஜோதிகாவின் சம்பளத்தை தயாரிப்பாளர்களே சேர்ந்து ரூ. 40 லட்சத்துக்குஉயர்த்திவிட்டார்களாம்.சும்மா வந்து ஆடுற பொண்ணுகளுக்கே அள்ளித் தர்றோம்.. இந்தப் பொண்ணு நடிப்புக்கு எவ்வளவும் தரலாம் என்கிறார்களாம்.ஆக, ஜோவின் சம்பளம் தானாகவே ரூ. 40 லட்சம் ஆகிவிட்டது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியில் நடித்தாலும் நடித்தார், ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள். அத்தனை வாய்ப்புகளையும் அப்படியேதிருப்பி அனுப்பி வரும் ஜோதிகா ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டு வாங்கிய இரு படங்களின் பெரிய அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட்டார் ஜோதிகா.இதற்கு பர்சனல் மேட்டர் என்ற காரணத்தை ஜோதிகா தெரிவித்ததால், அடுத்த மாதம் விரைவில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும்திருமணம் என்று பட்டையைக் கிளப்பிவிட்டுவிட்டனர் இரு தெலுங்கு தயாரிப்பாளர்களும்.

இதனால் வெறுத்துப் போன ஜோதிகா தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம் அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

கதை சரியில்லாததால் தான் அந்தப் படங்களில் இருந்து விலகினாராம். அதைத் தான் திருமணத்துடன் முடிச்சு போட்டு வேறுமாதிரியாக பரப்பிவிட்டுவிட்டார்களாம்.

இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில்நடிக்கிறார். அப்படியே அடுத்ததாக தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.


தெலுங்கில் தயாராகும் அந்தப் படம் ஏற்கனவே தமிழில் வெளி வந்து வெற்றி பெற்ற ஷாக் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில்மீனா நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜோதிகாவைத் தேர்ந்தெடுக்க காரணம் சந்திரமுகியில் அவரதுபிரமிப்பூட்டிய நடிப்பும், அவரது மிரட்டும் கண்களும் தான் காரணமாம்.

கண்களை உருட்டி, நானே சந்திரமுகி என்று கடப்பாரைக் குரலில் மிரட்டிய ஜோதிகாவைப் பார்த்து பயந்து போன தயாரிப்பாளர்இவர் தான் நமது அடுத்த திகில் படத்தின் ஹீரோயின் என்று முடிவு செய்துவிட்டு நேரில் வந்து சந்தித்து அட்வான்ஸை திணித்துவிட்டுப் போய் இருக்கிறார்.

கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம். வேட்டையாடு விளையாடு படத்திற்காக கொடுத்திருந்தகால்ஷீட்டை, அந்த படம் தாமதானதால் தெலுங்குப் படத்துக்கு எடுத்துக் கொடுத்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

சந்திரமுகி தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் மகா ஹிட் படமாகி விட்டது. அங்கு சிரஞ்சீவி நடித்த படங்கள்தான் இதுவரைவசூலில் சாதனை படைத்துள்ளன. அதை சந்திரமுகி தற்போது முறியடித்து விட்டதாம்.


இந் நிலையில் ஜோதிகாவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. மற்ற நடிகைகள் மாதிரி இம்புட்டு கொடுத்தா தான் ஆச்சு என்றுஅடம் பிடிக்காத டைப் ஜோதிகா. டீசண்ட் சம்பளம் என்றால், கதை சரியாக இருந்தால் ஓ.கே. சொல்லிவிடுவார்.

இந் நிலையில் சந்திரமுகிக்குப் பின் ஜோதிகாவின் சம்பளத்தை தயாரிப்பாளர்களே சேர்ந்து ரூ. 40 லட்சத்துக்குஉயர்த்திவிட்டார்களாம்.

சும்மா வந்து ஆடுற பொண்ணுகளுக்கே அள்ளித் தர்றோம்.. இந்தப் பொண்ணு நடிப்புக்கு எவ்வளவும் தரலாம் என்கிறார்களாம்.

ஆக, ஜோவின் சம்பளம் தானாகவே ரூ. 40 லட்சம் ஆகிவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil