ஜோதிகா ஒர்க் அவுட்டில் பின்றாங்க ப்பா.. வேற லெவல்.. மேடம் செம ஃபிட்

சென்னை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா; பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு ரீ என்ட்ரி கொடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய கரியரை ரொம்பவே கவனமாக தொடங்கினார். அதன்படி 36 வயதினிலே, ராட்சசி, உடன் பிறப்பே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அத்தனையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் பெரிய ரவுண்டு கோலிவுட்டில் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஹிந்திக்கு சென்று அங்கேயே முழு கவனத்தையும் செலுத்திவருகிறார்.

ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். ஹிந்தியில் திரை பயணத்தை ஆரம்பித்தாலும் தமிழில்தான் பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியது. ஹீரோக்களுக்காக மட்டுமே பல படங்கள் வந்த சூழலில்; கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சந்திரமுகி, மொழி படங்களில் நடித்தார். அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை ஹீரோக்களைவிடவும் அதிகம் அள்ளினார். இதற்கிடையே சூர்யாவை பல வருடங்களாக காதலித்தார். அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதமும் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜோதிகா: திருமணம் ஆன சில வருடங்களிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். எனவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் முழுக்க முழுக்க ஈடுபட்டார். பிள்ளைகள் நன்றாக வளர்ந்ததை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இந்த முறை முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்து நடித்தார். தமிழில் அவர் வரிசையாக 36 வயதினிலே, ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே என நடித்தார். அந்தப் படங்கள் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தன.

Jyothika s Intense Gym Workout Video at 47 Goes Viral

பாலிவுட்டில் ஜோதிகா: கோலிவுட்டில் மட்டும்தான் அவரது கவனம் இருக்கும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. அவரோ எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் பாலிவுட்டுக்கு சென்று முழுவதும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யாவும் அங்கேதான் இருக்கிறார். சிவக்குமாருடன் நடந்த பிரச்னைதான் அத்தனைக்கும் காரணம் என கூறப்பட்டது. அதை அவர்களோ திட்டவட்டமாக மறுத்தார்கள். அவ்வப்போது சென்னை வரும் சூர்யா - ஜோதிகா குடும்பத்தினருடன் சுமூகமாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

ஜோதிகாவின் லைன் அப்: ஜோவின் தற்போதைய லைன் அப்பை பொறுத்தவரை, அவரது கைகளில் இப்போது சிஸ்டம் என்ற படம் இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஓடிடிக்காக நடித்த டப்பா கார்ட்டெல் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் ஜோதிகாவின் நடிப்புக்கும், அப்படி நடிக்க முடிவெடுத்ததற்கும் ரசிகர்கள் எக்கச்சக்க அப்ளாஸை கொடுத்தார்கள். இந்நிலையில் ஜோதிகாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

ட்ரெண்டாகும் வீடியோ: அதாவது ஜோதிகா தனது ஃபிட்னெஸ்ஸில் அதீத கவனம் செலுத்துபவர். அடிக்கடி ஜிம்முக்கு சென்று தனது கணவர் போன்றே ஒர்க் அவுட்டுகளை வெறித்தனமாக செய்பவர். அந்தவகையில் அவர் சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 47 வயதில் மேடம் 17 வயது மாதிரி இப்படி ஆக்டிவ்வாக ஒர்க் அவுட் செய்கிறாரே என்று சொல்லி அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X