Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் இந்தியில் கடந்த வாரம் வெளியானத் திரைப்படம் ஷைத்தான். இதில் அஜய் தேவ்கன், மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பில்லி, சூனியம், பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவானத் இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை அள்ளி வருகிறது.
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகை என்று பெயர் எடுத்த நடிகை ஜோதிகா, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவரின் தனித்துவமான நடிப்பும், துரு துருப்பான பார்வையும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.

நடிகை ஜோதிகா: இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே பல திரைப்படங்களில் நடித்தார்.
ஷைத்தான்: நடிகை ஜோதிகா 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியில் ஷைத்தான் என்ற படத்தில் நடித்துள்ளார் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவான இப்படத்தில் ஜோதிகா அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். குஜராத்தி மொழியில் உருவான வாஷ் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த சைத்தான் திரைப்படம்.
படத்தின் கதை: அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா இருவரும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தோடு பண்ணை வீட்டுக்கு செல்ல வழியில், எதிர்பாராத விதமாக மாதவனுடன் நட்பு ஏற்படுகிறது. அப்போது, மாதவன் கொடுக்கும் லட்டை வாங்கி சாப்பிட்ட மகள், மாதவன் எது சொன்னாலும் சூனியம் வைத்தது போல அதற்கு கட்டுப்பட்டு செய்கிறாள். இதன் பின்ன என்ன? மாதவன் யார்? என்பது தான் ஷைத்தான் திரைப்படத்தின் கதை.
படத்தின் மொத்த வசூல்: 8ந் தேதி வெளியான ஷைத்தான் திரைப்படம் முதல் நாளில்,5.05 கோடியை வசூலித்தது. இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து 8.5 கோடியை ஈட்டியது. ஷைத்தான் திரைப்படம், வெளிநாடுகளில் 23.5 கோடியும், இந்தியாவின் ரூ121.5 கோடியும் வசூலித்துள்ளது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆகி உள்ள நிலையில் படத்தின் மொத்த வசூல் ரூ145 கோடியாக உள்ளது. இப்படம் மேலும் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











