»   »  ஜோதிர்மயியும் கேப்டனும்

ஜோதிர்மயியும் கேப்டனும்

Subscribe to Oneindia Tamil
விஜயகாந்த்தின் அடுத்த பட நாயகியாகியுள்ளார் ஜோதிர்மயி.

புத்தம் புது பருவ மொட்டுக்கள் கேரளாவிலிருந்து அலை அலையாக கோலிவுட்டுக்குவந்து கொண்டிருக்கும் நிலையில் முதிர் கன்னியான ஜோதிர்மயியும் தனதுஅதிர்ஷ்டத்தை பரீட்சித்துப் பார்க்க படு தெம்பாக வந்து சேர்ந்தார்.

சுந்தர்.சிக்கு ஜோடியாக தலைநகரம் மூலம் தமிழில் அறிமுகமாக அம்மணி முன்னாள்கன்னி என்றாலும் கூட அவருக்கும் சில படங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன.

பெரியார் படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக அதாவது, நாகம்மை கேரக்டரில்வருகிறார் ஜோதிர்மயி. இந்த ரோலுக்கு முன்பு கேரளத்து கீது மோகன்தாஸைத்தான்தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ கீது பின் வாங்கி விட்டதால்அடிச்சது ஜோதிருக்கு வாய்ப்பு.

சேச்சியிடம் மலையாளத்திலும் 3 படங்கள் கையில் இருக்கிறதாம். தமிழிலும் மேலும்சில பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளனவாம் (ஜோதிர்தான் அப்படிக் கூறிக்கொள்கிறார்!).

சின்னப் பசங்களோடு ஜோடி போடவே ஜோதிருக்கு ஆசை அதிகம் இருந்தாலும்,முடியுமா? எல்லாப் பசங்களும் அவங்களை விட அஞ்சு வயசு சின்னப்புள்ளையாகத்தான் பார்க்கிறார்கள்.

எனவே நமக்கெல்லாம் விஜய், சூர்யா, அஜீத்தோடு ஜோடி சேரும் வாய்ப்புவாய்க்கவே வாய்க்காது என்று ஏக்கமாக இருந்த ஜோதிருக்கு, மூத்த நடிகர்விஜயகாந்த் படம் கிடைத்துள்ளது.

கம்பீரம் என்ற படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கப் போகும் அடுத்த படம் சபரி.கேப்டன் விஜயகாந்த்தான் ஹீரோ. தர்மபுரி படத்தை முடித்து விட்டு இந்தப் படத்துக்குவருகிறார் விஜயகாந்த்.

இப்படத்திற்குத்தான் ஜோதிர்மயியை ஹீரோயினாக புக் செய்துள்ளனர். சமீபத்தில்போட்டோ செஷன் நடத்தி ஜோதிரை படு வித்தியாசமான கோணங்களில் ஸ்டில்எடுத்தனராம்.

கிளியின் நிறத்தில் இப்படத்தில் கிளாமரில் விளையாடவுள்ளாாம் ஜோதிர்.பெரிசுகளோடு நடித்தே காலத்தைத் தள்ளிப்புடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும்ஜோதிருக்கு இந்தப் படம் பலமான பேஸ்மண்ட் அமைத்துக் கொடுக்கும் என்றநம்பிக்கை உள்ளதாம்.

பிரகாசிக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil