'வெடிகுண்டு' ஜோதிர்மயி

By Staff
Jyothirmayi
சின்ன இடைவெளிக்குப் பிறகு ஜோதிர்மயிக்கு மீண்டும் ஒரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது.

தலைநகரம் மூலம் நடிக்க வந்த ஜோதிர்மயிக்கு தமிழில் நிலையான இடம் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் தலை காட்டியபடி இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த படம் நான் அவனில்லை.

கிளாமர் காட்ட தயாராக இருந்தும் கூட கல்யாணமானவர் என்பது அவரது கேரியர் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறதாம். இருந்தாலும் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை தட்டாமல் ஏற்றுக் கொள்கிறார் ஜோதிர்.

அந்த வகையில் அவரைத் தேடி ஒரு புதுப் பட வாய்ப்பு வந்துள்ளது. அதில் பசுபதியுடன் ஜோடி போடவுள்ளார் ஜோதிர்மயி. படத்திற்குப் பெயர் வெடிகுண்டு முருகேசன்.

கூடல் நகரம், வைத்தீஸ்வரன், பம்பரக் கண்ணாலே ஆகிய படங்களைத் தயாரித்த அண்ணாமலை பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. மூர்த்தி இயக்கவுள்ளார்.

பசுபதி, ஜோதிர்மயி இணையில் உருவாகவுள்ள இப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். படத்தின் கதையே அவரை வைத்துத்தான் நகருமாம்.

மூர்த்திக்கு இது 2வது படம். அவர் இயக்கிய முதல் படம் கருப்பசாமி குத்தகைதாரர். முதல் படத்திலேயே முத்திரை பதித்த மூர்த்தி 2வது படத்தில் கோலிவுட்டில் வெற்றி குண்டை போடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளது வெடிகுண்டு முருகசேன் பட குழு.

21ம் தேதி ராஜபாளையத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுப்பாக வளர்க்கப் போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X