»   »  பார்த்திபனை நோகடித்த நமிதா, மீரா பார்த்திபன் நிலைமை ராமராஜன் நிலையை விட மோசமாகிக் கொண்டிருக்கிறது.இவர் தானே தயாரித்து இயக்கப் போகும் பச்சக் குதிரை என்ற படத்தில் நடிக்க எந்த முன்னணி நடிகையும் தயாராக இல்லையாம்.இதனால் மிகவும் நொந்து போய் விட்டார்.தொடர்ந்து தோல்விப் படங்களைத் தந்துவரும் பார்த்திபனுடன் சமீபத்தில் நடித்த லட்சுமி ராய், மதுமிதா ஆகியோர்வாய்ப்பில்லாமல் அலைந்து வருகின்றனர். இதனால் அவரை அலர்ஜியாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர் கோலிவுட் நடிகைகள். சத்யராஜுடன் அடுத்தடுத்து நடிக்கும் நமிதாவை எப்படியாவது தனக்கு ஜோடிக்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்றுபார்த்தாராம் பார்த்தி. பெரிய சம்பளமும் பேசினாராம். ஆனால், பார்த்திக்கு ஜோடி போட நமிதா மறுத்துவிட்டாராம்.ஒத்தை பாட்டு எல்லாம் ஆடுறீங்க, என்னோட ஜோடி சேர்றதுல என்ன கஷ்டம் என்று கேட்டாராம். ஸாரி.. டேட்ஸ் இல்லைஅதான் என்று லாவகமாக பதில் சொல்லித் தப்பிவிட்டாராம் நமிதா.இதையடுத்து மீரா ஜாஸ்மீனை தொடர்பு கொண்டார். அவரை தனது ஆபிசுக்கே வரவழைத்து கதையையும் சொன்னார். கதை ரொம்ப நல்லா இருக்கே என்று சிலாகித்த மீரா, ஹீரோ யாரு என்று பாயிண்டுக்கு வர, நான் தான் அது என்று பார்த்திபன்சொன்னவுடன், வீட்டுப் போய் கால் பண்றேன் என்று எஸ் ஆகிவிட்டாராம்.போனவர் போன் போட்டு ஸாரி, கால்ஷீட் இடிக்குது, வேறு ஹீரோயினைப் பாருங்க என்று சொல்லி தப்பிவிட்டாராம் மீரா.இதனால் கடுப்பான பார்த்திபன் அடுத்ததாக கேரளத்துக் குதிரை ஜோதிர்மயியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். வந்தவேகத்திலேயே இதயத் திருடன் படத்தில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஜோதிர்மயி ஒரு வழியாக பார்த்திபனுடன் நடிக்கசம்மதித்துவிட்டாராம். வெளிநாட்டில் வசிக்கும் மலையாளியான சாப்ட்வேர் ஆசாமி ஒருவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக்கூறப்படும் ஜோதிர்மயி, கவர்ச்சியிலும் விருந்து படைக்க ஒப்புக் கொண்டதால், ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளார்பார்த்திபன்.இதற்கிடையே தானும் சீதாவும் சேர்ந்து கட்டிய வீட்டை விற்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் பார்த்தி. படத் தயாரிப்புகளால்ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும், பச்சக் குதிரை தயாரிப்புக்காகவும் தான் வீட்டை விற்கிறாராம்.சீதாவை பிரிந்த பிறகு பார்த்திபன் பெரும்பாலும் தனது ஆபிசில் தான் தங்குகிறார்.

பார்த்திபனை நோகடித்த நமிதா, மீரா பார்த்திபன் நிலைமை ராமராஜன் நிலையை விட மோசமாகிக் கொண்டிருக்கிறது.இவர் தானே தயாரித்து இயக்கப் போகும் பச்சக் குதிரை என்ற படத்தில் நடிக்க எந்த முன்னணி நடிகையும் தயாராக இல்லையாம்.இதனால் மிகவும் நொந்து போய் விட்டார்.தொடர்ந்து தோல்விப் படங்களைத் தந்துவரும் பார்த்திபனுடன் சமீபத்தில் நடித்த லட்சுமி ராய், மதுமிதா ஆகியோர்வாய்ப்பில்லாமல் அலைந்து வருகின்றனர். இதனால் அவரை அலர்ஜியாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர் கோலிவுட் நடிகைகள். சத்யராஜுடன் அடுத்தடுத்து நடிக்கும் நமிதாவை எப்படியாவது தனக்கு ஜோடிக்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்றுபார்த்தாராம் பார்த்தி. பெரிய சம்பளமும் பேசினாராம். ஆனால், பார்த்திக்கு ஜோடி போட நமிதா மறுத்துவிட்டாராம்.ஒத்தை பாட்டு எல்லாம் ஆடுறீங்க, என்னோட ஜோடி சேர்றதுல என்ன கஷ்டம் என்று கேட்டாராம். ஸாரி.. டேட்ஸ் இல்லைஅதான் என்று லாவகமாக பதில் சொல்லித் தப்பிவிட்டாராம் நமிதா.இதையடுத்து மீரா ஜாஸ்மீனை தொடர்பு கொண்டார். அவரை தனது ஆபிசுக்கே வரவழைத்து கதையையும் சொன்னார். கதை ரொம்ப நல்லா இருக்கே என்று சிலாகித்த மீரா, ஹீரோ யாரு என்று பாயிண்டுக்கு வர, நான் தான் அது என்று பார்த்திபன்சொன்னவுடன், வீட்டுப் போய் கால் பண்றேன் என்று எஸ் ஆகிவிட்டாராம்.போனவர் போன் போட்டு ஸாரி, கால்ஷீட் இடிக்குது, வேறு ஹீரோயினைப் பாருங்க என்று சொல்லி தப்பிவிட்டாராம் மீரா.இதனால் கடுப்பான பார்த்திபன் அடுத்ததாக கேரளத்துக் குதிரை ஜோதிர்மயியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். வந்தவேகத்திலேயே இதயத் திருடன் படத்தில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஜோதிர்மயி ஒரு வழியாக பார்த்திபனுடன் நடிக்கசம்மதித்துவிட்டாராம். வெளிநாட்டில் வசிக்கும் மலையாளியான சாப்ட்வேர் ஆசாமி ஒருவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக்கூறப்படும் ஜோதிர்மயி, கவர்ச்சியிலும் விருந்து படைக்க ஒப்புக் கொண்டதால், ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளார்பார்த்திபன்.இதற்கிடையே தானும் சீதாவும் சேர்ந்து கட்டிய வீட்டை விற்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் பார்த்தி. படத் தயாரிப்புகளால்ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும், பச்சக் குதிரை தயாரிப்புக்காகவும் தான் வீட்டை விற்கிறாராம்.சீதாவை பிரிந்த பிறகு பார்த்திபன் பெரும்பாலும் தனது ஆபிசில் தான் தங்குகிறார்.

Subscribe to Oneindia Tamil
பார்த்திபன் நிலைமை ராமராஜன் நிலையை விட மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இவர் தானே தயாரித்து இயக்கப் போகும் பச்சக் குதிரை என்ற படத்தில் நடிக்க எந்த முன்னணி நடிகையும் தயாராக இல்லையாம்.இதனால் மிகவும் நொந்து போய் விட்டார்.

தொடர்ந்து தோல்விப் படங்களைத் தந்துவரும் பார்த்திபனுடன் சமீபத்தில் நடித்த லட்சுமி ராய், மதுமிதா ஆகியோர்வாய்ப்பில்லாமல் அலைந்து வருகின்றனர். இதனால் அவரை அலர்ஜியாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர் கோலிவுட் நடிகைகள்.

சத்யராஜுடன் அடுத்தடுத்து நடிக்கும் நமிதாவை எப்படியாவது தனக்கு ஜோடிக்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்றுபார்த்தாராம் பார்த்தி. பெரிய சம்பளமும் பேசினாராம். ஆனால், பார்த்திக்கு ஜோடி போட நமிதா மறுத்துவிட்டாராம்.

ஒத்தை பாட்டு எல்லாம் ஆடுறீங்க, என்னோட ஜோடி சேர்றதுல என்ன கஷ்டம் என்று கேட்டாராம். ஸாரி.. டேட்ஸ் இல்லைஅதான் என்று லாவகமாக பதில் சொல்லித் தப்பிவிட்டாராம் நமிதா.

இதையடுத்து மீரா ஜாஸ்மீனை தொடர்பு கொண்டார். அவரை தனது ஆபிசுக்கே வரவழைத்து கதையையும் சொன்னார்.

கதை ரொம்ப நல்லா இருக்கே என்று சிலாகித்த மீரா, ஹீரோ யாரு என்று பாயிண்டுக்கு வர, நான் தான் அது என்று பார்த்திபன்சொன்னவுடன், வீட்டுப் போய் கால் பண்றேன் என்று எஸ் ஆகிவிட்டாராம்.

போனவர் போன் போட்டு ஸாரி, கால்ஷீட் இடிக்குது, வேறு ஹீரோயினைப் பாருங்க என்று சொல்லி தப்பிவிட்டாராம் மீரா.

இதனால் கடுப்பான பார்த்திபன் அடுத்ததாக கேரளத்துக் குதிரை ஜோதிர்மயியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். வந்தவேகத்திலேயே இதயத் திருடன் படத்தில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஜோதிர்மயி ஒரு வழியாக பார்த்திபனுடன் நடிக்கசம்மதித்துவிட்டாராம்.

வெளிநாட்டில் வசிக்கும் மலையாளியான சாப்ட்வேர் ஆசாமி ஒருவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக்கூறப்படும் ஜோதிர்மயி, கவர்ச்சியிலும் விருந்து படைக்க ஒப்புக் கொண்டதால், ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளார்பார்த்திபன்.

இதற்கிடையே தானும் சீதாவும் சேர்ந்து கட்டிய வீட்டை விற்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் பார்த்தி. படத் தயாரிப்புகளால்ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும், பச்சக் குதிரை தயாரிப்புக்காகவும் தான் வீட்டை விற்கிறாராம்.

சீதாவை பிரிந்த பிறகு பார்த்திபன் பெரும்பாலும் தனது ஆபிசில் தான் தங்குகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil