For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பச்சக் குதிரை ஜோதிர்மயி மீண்டும் குதிரை வேட்டையில் படு சுறுசுறுப்பாக இறங்கியுள்ளார் பார்த்திபன். தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்கு குதிரை, சீமைப்பசு என செல்லமாகப் பெயரிடுவது பார்த்தியின் வாடிக்கை. ரவளிக்கு சீமைப்பசு என்று பெயரிட்டார். மதுமிதாவுக்கு குதிரை என்று பெயர் கொடுத்தார்.இப்படிச் செல்லமாக பெயரிட்டே கூட நடிக்கும் நநிடிகைகளுடன் குளோஸ் ஆகி விடுவார் பார்த்திபன். அத்தோடு நிற்காமல் அவர்களது பிறந்த நாள், புத்தாண்டு என எந்த விசேஷம் வந்தாலும் வித்தியாசமான பரிசுகளை அளித்துஅவர்களை கவர்வதும் அண்ணனின் வாடிக்கை.அவரால் அசத்தப்பட்ட நாயகிகளின் எண்ணிக்கை ரொம்ப நீளம், அத்தோடு அவரோடு கிசுகிசுக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையும் ஜாஸ்திதான். இந்த கிசுகிசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் அவரையும், மனைவி சீதாவையும் ஆளுக்கொரு மூலையாக பிரித்துப் போட்டுவிட்டது. இப்போது விஷயம் என்னவென்றால் சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளார் பார்த்திபன்.பச்சக்குதிரை என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார். இந்தப் படத்திற்கான நாயகியைத்தான்அலைந்து அலைந்து தேடி வருகிறார். ஆனால் ஒருத்தரும் சிக்க மாட்டேன் என்கிறார்களாம். காரணம், கதையில் பரவிக் கிடக்கும்கிளாமர் தானாம்.முதலில் மீரா ஜாஸ்மினைப் பார்த்துள்ளார்கள். கதை நன்றாக இருக்கிறதே என்று தலையாட்ட ரெடியாகியுள்ளார் மீரா. ஆனால்,படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கிறது. செய்ய முடியுமா என்று கேட்டவுடன், பயந்து போய், அச்சச்சோ, அதைமுதலிலேயே சொல்லலையே, ஸாரி, என்னால் முடியாது என்று பம்மிக் கொண்டாராம் மீரா.சரி போனால் போகிறதென்று, கவர்ச்சிக் குதிரையான நமீதாவைக் கேட்டிருக்கிறார்கள். நான் கிளாமர் காட்டுவதில் வரைமுறைபார்ப்பதில்லைதான், ஆனால் நானே வெட்கி, கூசும்படி உங்கள் கதையில் கிளாமர் இருக்கிறது, ஸோ, ஸாரி என்று கை கூப்பிவிட்டாராம்.அடடா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்ட பார்த்திபன், சில கேரள நடிகைகளைப் போய்ப்பார்த்துள்ளார். யாரும் சரிப்பட்டு வரவில்லை. இதனால் வெறுத்துப் போயிருந்த பார்த்திபனிடம் தனது ஜகஜாலமானஆல்பத்துடன் நேரில் வந்து ஆஜரானார் கேரள நாயகியான ஜோதிர்மயி. உங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாய் சொல்லிக் கொண்டு தானே வலிய வந்து பேசியிருக்கிறார்.இதனால் மகிழ்ந்து போன பார்த்திபன் அவரை ஹீரோயினாக்க முடிவு செய்திருந்தார். இந் நிலையில் ஜோதிர்மயி சமீபத்தில்கேரளாவைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை ரகசியமாய் கைப்பிடித்த சமாச்சாரம் மெதுவாக வெளியில் கசிந்துவிட்டது.இதையடுத்து ஜோதிர்மயிக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயினைத் தேட ஆரம்பித்திருக்கிறாராம்.தமிழில் நல்ல பிரேக்கோடு, கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஜோதிர்மயி, பார்த்திபன் படத்தில்எப்போதுமே கிளாமர் தூக்கலாகத்தான் இருக்கும் என்பதால், நிச்சயம் இது தனக்கு உதவியாக இருக்கும் என்ற ஒரேகாரணத்திற்காக அவரது படத்தில் நடிக்கத் தயாரானார்.ஆனால், ஜோதிர்மயி சமீபத்தில் கழுத்தை நீட்டிய செய்தி பரவினால் தனது படத்துக்கு டேமேஜிங்காக இருக்குமே என்றுயோசிக்கும் பார்த்திபன், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறாராம்.ஆனாலும் வேறு யாரும் சிக்காவிட்டால் ஜோதிர்மயியே பச்சக் குதிரையாவார் என்று தெரிகிறது.

  By Staff
  |
  மீண்டும் குதிரை வேட்டையில் படு சுறுசுறுப்பாக இறங்கியுள்ளார் பார்த்திபன்.

  தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்கு குதிரை, சீமைப்பசு என செல்லமாகப் பெயரிடுவது பார்த்தியின் வாடிக்கை. ரவளிக்கு சீமைப்பசு என்று பெயரிட்டார். மதுமிதாவுக்கு குதிரை என்று பெயர் கொடுத்தார்.

  இப்படிச் செல்லமாக பெயரிட்டே கூட நடிக்கும் நநிடிகைகளுடன் குளோஸ் ஆகி விடுவார் பார்த்திபன்.

  அத்தோடு நிற்காமல் அவர்களது பிறந்த நாள், புத்தாண்டு என எந்த விசேஷம் வந்தாலும் வித்தியாசமான பரிசுகளை அளித்துஅவர்களை கவர்வதும் அண்ணனின் வாடிக்கை.

  அவரால் அசத்தப்பட்ட நாயகிகளின் எண்ணிக்கை ரொம்ப நீளம், அத்தோடு அவரோடு கிசுகிசுக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையும் ஜாஸ்திதான்.

  இந்த கிசுகிசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் அவரையும், மனைவி சீதாவையும் ஆளுக்கொரு மூலையாக பிரித்துப் போட்டுவிட்டது. இப்போது விஷயம் என்னவென்றால் சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளார் பார்த்திபன்.

  பச்சக்குதிரை என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார். இந்தப் படத்திற்கான நாயகியைத்தான்அலைந்து அலைந்து தேடி வருகிறார். ஆனால் ஒருத்தரும் சிக்க மாட்டேன் என்கிறார்களாம். காரணம், கதையில் பரவிக் கிடக்கும்கிளாமர் தானாம்.

  முதலில் மீரா ஜாஸ்மினைப் பார்த்துள்ளார்கள். கதை நன்றாக இருக்கிறதே என்று தலையாட்ட ரெடியாகியுள்ளார் மீரா. ஆனால்,படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கிறது. செய்ய முடியுமா என்று கேட்டவுடன், பயந்து போய், அச்சச்சோ, அதைமுதலிலேயே சொல்லலையே, ஸாரி, என்னால் முடியாது என்று பம்மிக் கொண்டாராம் மீரா.

  சரி போனால் போகிறதென்று, கவர்ச்சிக் குதிரையான நமீதாவைக் கேட்டிருக்கிறார்கள். நான் கிளாமர் காட்டுவதில் வரைமுறைபார்ப்பதில்லைதான், ஆனால் நானே வெட்கி, கூசும்படி உங்கள் கதையில் கிளாமர் இருக்கிறது, ஸோ, ஸாரி என்று கை கூப்பிவிட்டாராம்.

  அடடா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்ட பார்த்திபன், சில கேரள நடிகைகளைப் போய்ப்பார்த்துள்ளார். யாரும் சரிப்பட்டு வரவில்லை. இதனால் வெறுத்துப் போயிருந்த பார்த்திபனிடம் தனது ஜகஜாலமானஆல்பத்துடன் நேரில் வந்து ஆஜரானார் கேரள நாயகியான ஜோதிர்மயி.

  உங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாய் சொல்லிக் கொண்டு தானே வலிய வந்து பேசியிருக்கிறார்.

  இதனால் மகிழ்ந்து போன பார்த்திபன் அவரை ஹீரோயினாக்க முடிவு செய்திருந்தார். இந் நிலையில் ஜோதிர்மயி சமீபத்தில்கேரளாவைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை ரகசியமாய் கைப்பிடித்த சமாச்சாரம் மெதுவாக வெளியில் கசிந்துவிட்டது.

  இதையடுத்து ஜோதிர்மயிக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயினைத் தேட ஆரம்பித்திருக்கிறாராம்.

  தமிழில் நல்ல பிரேக்கோடு, கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஜோதிர்மயி, பார்த்திபன் படத்தில்எப்போதுமே கிளாமர் தூக்கலாகத்தான் இருக்கும் என்பதால், நிச்சயம் இது தனக்கு உதவியாக இருக்கும் என்ற ஒரேகாரணத்திற்காக அவரது படத்தில் நடிக்கத் தயாரானார்.

  ஆனால், ஜோதிர்மயி சமீபத்தில் கழுத்தை நீட்டிய செய்தி பரவினால் தனது படத்துக்கு டேமேஜிங்காக இருக்குமே என்றுயோசிக்கும் பார்த்திபன், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறாராம்.

  ஆனாலும் வேறு யாரும் சிக்காவிட்டால் ஜோதிர்மயியே பச்சக் குதிரையாவார் என்று தெரிகிறது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X