மீண்டும் வெள்ளித் திரையில் ஜோதிகா?
சூர்யா மனைவியான பின் தானுண்டு தன் குழந்தைகள் உண்டு என இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறாராம்.
அதுவும் ஹீரோயினாகவே!

இவரை இயக்கவிருப்பவர் 'பசங்க' பாண்டிராஜ்.
நம்ப கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். காரணம், சூர்யா - ஜோதிகா திருமணம் முடிந்த பிறகு நடந்த பிரஸ் மீட்டில், 'திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?" என்று கேட்டபோது, "இல்லய்யா... அவ நடிக்கமாட்டா... அதை நாங்கள் ஒருபோதும் விரும்பவும் இல்லை", என்று மிகக் கோபமாக பதிலளித்தார் சிவகுமார்.
ஆனால் காலம் எல்லா முடிவுகளையும் மாற்றுமல்லவா... இப்போது சிவகுமார் குடும்பத்தின் பூரண ஆசியோடு நடிக்க வருகிறார் ஜோதிகா.
இந்தப் படத்தின் ஹீரோ கிடையாது (அதானே முக்கியம்!). சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு மிக முக்கியமான வேடமாம்.
மனைவி மீண்டும் நடிப்பதில் சூர்யாவுக்கும் முழு சம்மதமாம்!


Click it and Unblock the Notifications