சூர்யா பிறந்தநாள்.. கார்த்தி வாழ்த்து சொல்லிட்டாரு.. ஜோதிகா ஏன் சொல்லல?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சூழலில் ஜோதிகா வாழ்த்து தெரிவிக்காதது பல கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது.

சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

Jyotika Suriya

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகியிருக்கிறது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

சூர்யா பிறந்தநாள்: சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி சூர்யா 44, கங்குவா ஆகிய படங்களின் அப்டேட்டுகள் வந்தன. அதேபோல் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தெரிவித்திருக்கும் வாழ்த்தில், "பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் சாதிக்கமுடியும் என்று எனக்கு கற்று தந்த சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.

வாழ்த்து சொல்லாத ஜோதிகா: இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோதிகா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதனை கவனித்த ரசிகர்கள் பலரும் ஏன் சூர்யாவுக்கு ஜோதிகா வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஒருவேளை எதுவும் பஞ்சாயத்தாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பினர். ஆனால் சூர்யாவின் ரசிகர்களோ, சில வாரங்களுக்கு முன்னர்கூட அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். அவர்களுக்குள் எப்படி பஞ்சாயத்து வரும். சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொல்லலைனா என்ன; நேரில் சூர்யாவுக்கு பெரிய பரிசையே ஜோ கொடுத்திருப்பார். அனைத்தையும் பொது வெளியில் சொல்லவோ, காண்பிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X