ஜோதிகாவின் மறுபிரவேச படம்.. இன்று ஷூட்டிங் தொடக்கம்
ஜோதிகாவின் சினிமா மறுபிரவேசம் நாளை முதல் தொடங்குகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்து வெளியான படத்தின் ரீமேக்கில் இன்று முதல் நடிக்க ஆரம்பித்தார்.
‘ஹவ் ஓல்டு ஆர் யூ' என்ற படத்தின் கதை பிடித்துப் போனதால், அதைத் தமிழில் ரீமேக் செய்து தனது அடுத்த ரவுண்டைத் தொடர விரும்பினார் ஜோதிகா. அவர் விருப்பத்துக்கு கணவர் சூர்யாவும் தடை சொல்லவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று தொடங்கும் முதல்கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இப்படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் மூலம் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவ்ஸ் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











