அம்பானி வீட்டு கல்யாணம்.. பல வருடங்களுக்கு பின் ஜோதிகா செஞ்ச செம விஷயம்.. பயங்கரமான லவ் போங்க
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.

அம்பானி வீட்டு கல்யாணம்: இதற்கிடையே இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி; தனது இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்துவைத்தார். இந்தத் திருமணத்துக்கு கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவு ஆனதாக சொல்லப்படுகிறது. ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஆனந்த் காதலித்து கரம்பிடித்திருக்கிறார். இந்தத் திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.
சூர்யா - ஜோதிகா: அந்தவகையில் சூர்யாவும் ஜோதிகாவும் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டார்கள். சூர்யா வெள்ளை வேட்டியும், சட்டையும், ஜோதிகா பட்டு புடவையும் அணிந்து வந்திருந்தனர். இந்நிலையில் திருமணத்தில் ஜோதிகா அணிந்திருந்த ஒரு வைர மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது அந்த இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை தங்களுடைய திருமணத்தின்போது ஜோதிகாவுக்கு சூர்யா அணிவித்தார். அதனை இடையில் சில காலம் அணியாமல் இருந்தார் ஜோ. இப்போது அதை அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்களை அட கரெக்ட்டான இடத்துக்கு கரெக்ட்டான நேரத்துல அந்த மோதிரத்தை போட்டுட்டு போயிருக்காங்க ஜோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











