Jyotika: ஜோதிகாவின் இந்தி படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. டைட்டில் மற்றும் போஸ்டரை போட்டுட்டாரே!
மும்பை: நடிகை ஜோதிகா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டுக்களை பெற்றது. ஓரினச் சேர்க்கையாளராக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி எந்தவொரு இமேஜையும் பற்றி யோசிக்காமல் நடிகன் என்பவன் நல்ல கலைஞனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தார்.
மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த ஜோதிகா மீண்டும் மலையாளத்தில் அதுவும் மம்மூட்டிக்கு ஜோடியாகவே நடித்து விட்டார். இந்நிலையில், அடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ஜோதிகா அங்கே நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.

விஜய் படம் வேண்டாம்: நடிகர் விஜய்யுடன் குஷி மற்றும் திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோதிகா பல ஆண்டுகள் கழித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அவருக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்கிற தகவல் தீயாக பரவியது. ஆனால், நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேராமல் இருந்து வரும் ஜோதிகா விஜய் படத்தையும் வேண்டாம் என தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது. ஜோதிகாவுக்கு பதிலாக வசீகரா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சினேகா அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மாதவன் படத்தில்: காதல் தி கோர் படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா அடுத்து இந்தி படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அஜய் தேவகன் மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகி வரும் சைத்தான் படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். அந்த படம் வரும் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது படத்தின் போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை ஜோதிகா வெளியிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவை தொடர்ந்து அஜய் தேவ்கன் மற்றும் மாதவனும் அந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளனர்.

சூர்யாவை முந்தும் ஜோதிகா: ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்துள்ள நடிகர் சூர்யா அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சூரரைப் போற்று இந்தி ரீமேக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் கணவர் சூர்யாவை பாலிவுட்டில் ஜோதிகா ஒரு மார்ச் மாதமே முந்தப் போவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











